முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      கடலூர்
Image Unavailable

கடலூர் டவுன்ஹால் அருகில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,   கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி

ப்பேரணி கடலூர் நகர அரங்கில் இருந்து புறப்பட்டு நகராட்சி அலுவலகம் வழியாக அரசு மருத்துவமனையை வந்தடைந்தது. இப்பேரணியில் அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்கள், கிருஷ்ணா மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்கள், தூயவளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள், கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள், கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள் ஆகிய 300-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் பதாதைகளை ஏந்தியும், ‘அறிவோம் அறிவோம் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம், குணப்படுத்தலாம் குணப்படுத்தலாம் ஆரம்ப நிலை மார்பக புற்றுநோயை குணப்படுத்தலாம், செய்வோம் செய்வோம் மார்பக சுயபரிசோதனை செய்வோம், செய்வோம் செய்வோம் 3 மாதத்திற்கு ஒருமுறை செய்வோம் செய்வோம் மார்பக பரிசோதனை செய்வோம், இல்லை இல்லை புற்றுநோய் தொற்றுநோய் இல்லை, செய்து கொள்வீர் செய்துகொள்வீர் மார்பக புற்றுநோய் உள்ள குடும்பத்து பெண்கள் மார்பக பரிசோதனை செய்து கொள்வீர், உண்டு உண்டு மார்பக புற்றுநோய்க்கு பூரண சிகிச்சை உண்டு”  போன்ற விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டு  பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.  

 இப்பேரணியில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) டாக்டர் மாதவி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ஜவஹர்லால்,  கிருஷ்ணா மருத்துவமனைகளின் குழும இயக்குநர் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி ஆசிரியர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், கிருஷ்ணா மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் . செல்வி மற்றும் ஆசிரியர்கள், கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் ஞானஸ்கந்தன், கடலூர் பாடலிசிட்டி அரிமா சங்க தலைவர் கோடீஸ்வரன், செயலாளர் டாக்டர்.மகேஸ்வரி, பொருளாளர் .வசந்தி நாராயணன் மற்றும் தமிழரசன், இலங்கை இளையோர் மன்ற தலைவர்  சண்முகம், கிருஷ்ணசாமி பெண்கள் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் .பிரியா, தூயவளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ் அலுவலர் சந்தானராஜ், கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ் அலுவலர் . நளினி, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க உதவியாளர் .புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து