விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்த நாள் பள்ளிக் குழந்தைகளுக்கு ரூ.4.79 லட்சம் மதிப்புள்ள நல உதவிகள் வழங்கினார்

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      வேலூர்
VIT

 

விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹன்டே முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் உள்ளிட்ட பிரமுகர்கள் வாழ்த்தினர்.பிறந்த நாளை முனனிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு ரூ.4.79 லட்சம் மதிப்புள்ள நல உதவிகளை ஜி.வி.செல்வம் வழங்கினார்.

நல உதவிகள்

விஐடி பல்கலைக்கழகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் ஆர்.என்.பங்சன் பேலஸ் அரங்கில் நடைபெற்றது. வேலூர் பாரதியார் விவேகானந்தர் வஊசி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுபாட்டாளர் முனைவர் பி.செந்தில் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் பங்கேற்று வாழ்த்து தெரிவித்து பேசுகையில் பிறந்த நாள் கானும் ஜி.வி.செல்வம் வேலூர் மாவட்டத்திற்கு நீர் ஆதாரமாக உள்ள பாலாறு புதர்கள் வளர்ந்து மாசுபட்டு கிடந்ததை கவனத்தில் கொண்டு பசுமை பாலாறு என்ற திட்டத்தின் மூலமாக பாலாற்றை சுத்தம் செய்தார்.அண்மையில் பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளம் ஓடுகிறது. அதோடு வேலூர் பசுமையுடன் விளங்க வேண்டும் என்பதற்காக பசுமை வேலூர் என்ற திட்டத்தின் மூலமாக பல ஆயிரம் மரங்களை நட்டு பசுமையாக்கியள்ளார் என பாராட்டினார்.

நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹன்டே ஜி.வி.செல்வத்தை வாழ்த்தி பேசுகையில் குழந்தைகளின் நலனில் அக்கரை கொண்டுள்ள இவர் குழந்தை தொழிலாளர் பள்ளிகளுக்கு எண்ணற்ற உதவிகளை செய்து வருவது பாராட்டுக்குறியது என்றார்.

இதில் விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் பங்கேற்று வாழ்த்தி பேசியதாவது:

இந்திய நாடு உலகில் அதிக இளைஞர் பலம் கொண்ட நாடாக விளங்கி வருகிறது அவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதின் மூலம் இந்திய நாடு வளர்ந்த நாடாக மாறும்.நம்மிடையே பலமும் உள்ளது பலவீனமும் உள்ளது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை ஆறிந்து பலவீனத்தை விலக்குவதற்கான முயற்சி எடுத்தால் எதிலும் வெற்றி முடியும்.நமக்கு குடும்ப பொறுப்பு சமூக பொறுப்பு நாட்டு பொறுப்பு உள்ளது குடும்பம் மற்றும் சமூக பொறுப்பில் அக்கரை காட்டுவதின் மூலம் நாடு உயரும்.சமூகத்தில் நல்ல மணிதராக விளங்க வேண்டும் நல்ல மனிதருக்குரிய தகுதிகள் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் மூலமாக திருவள்ளுவர் வலியுறுத்தியுள்ளார். நம்மிடையே உழைப்பு குறைந்து வருகிறது சோம்பேறித்தனம் உள்ள நாடு முன்னேறமுடியாது. குறைந்த வேலை அதிக வருவாய் என்று நினைத்தால் அது குற்ற செயல்களில் தான் முடியும்.இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்கள் கற்று தர வேண்டும் அதோடு ஒழுக்கம் கட்டுபாடு நேரம் தவறாமை அவசியம் என்றார்.

நிகழ்ச்சியில் அறக்கட்டளை மூலமாக அதன் கவுரவ தலைவரும் விஐடி துணைத்தலைவருமான ஜி.வி.செல்வம் குழந்தை தொழிலாளர் நல பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுக்கு ரூ.4.79 லட்சம் மதிப்புள்ள ஆடைகள், விளையாட்டு சாதனங்கள், நோட்டு புத்தகங்கள், குடிநீர் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை வழங்கி பாராட்டுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது:

மனிதன் வாழ்வதற்கு உண்ண உணவு உடுத்த உடை இருக்க இடம் அவசியம் அதனை கருத்தில் கொண்டுதான் குழந்தைகளுக்கு இந்த நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மணப்பான்மை வேண்டும்.நாம் வளர்ந்து விட்டால் போதாது சமுதாயமும் வளர வேண்டும் அதற்காக நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.நமது நாடு இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடு அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்குவதின் மூலம் நமது நாடு வளர்ந்த நாடாக மாறிவிடும் என்றார்.

நிகழ்ச்சியில் அறக்கட்டளையை சேர்ந்த வே.சிவா ப.சேகர் ரொட்டேரியன் சீனிவாசன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர் முடிவில் நாஷ்வா அமைப்பின் தலைவர் வி.கே.எஸ்.எம்.கனேஷ் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து