கோபி வேலுமணி நகரில் சக்தி விநாயகர் கோவிலில் நரடபெற்ற சூரசம்கார விழாவில் முருகன் சிலை தானாக வியர்பதால் பக்தர்கள் பரவச வழிபாடு

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      ஈரோடு
IMG-20171025-WA0015

கோபிசெட்டிபாளையம் வேலுமணிநகரில் உள்ள சக்தி விநாயகர்கோயிலில் நடைபெற்ற சூரசம்கார விழாவில் முருகன் சிலை தானாக வியர்த்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இந்நிகழ்வை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு வழிபாடு செய்தனர்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வேலுமணிநகரில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோயிலில் கந்த ச~டி திருவிழா கடந்த 20ந்தேதி தொடங்கி ஆறு நாட்கள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நிறைவு நாளான இன்று பல்வேறு அபிN~கங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. மதியத்திற்கும் மேல் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. அப்போது முருகக்கடவுள் சிலையில் வியர்க்க ஆரம்பித்துள்ளது. இதை பார்த்த பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் குருகள் ஆகியோர் அதிச்சியடைந்தனர்.

அதனை தொடர்ந்து வயது முதிர்ந்த குருக்கள் சிலையை பார்த்த பின்னர் இது முருகன் கோயில்களில் சூரசம்கார நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருவதால் முருகன் வேல் வாங்கிய இடமான சிக்கல்லிலும் சூரனை வதம் செய்ய திருச்செந்தூரிலும் சூரசம்கார நிகழ்வின்போது முருகன் சிலையில் வியர்வை வழிந்தோடும் என்றும் அதுபோல் அதிசயமாக கோபியில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் சிலையிலும் வியர்வைகள் முத்து முத்தாக தென்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனால் அங்கிருந்த பக்தர்கள் பரவசமடைந்தனர். இச்செய்து கேள்விப்பட்டு ஆயிரக்கனக்கான பக்தர்கள் முருகனை வழிபட கோயிலுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கையில் தினமும் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டுவந்தபோதும் வளர்பிறை ச~டி மற்றும் தேய்பிறை ச~டிகளில் விசே~ பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்துவருகின்றனர் என்றும் இக்கோயிலுக்கு ஈரோடு திருப்பூர் சேலம் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர் என்றும் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சூரசம்கார நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து