வேதாரண்யம் ஒன்றியப் பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் நேரில் ஆய்வு

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      நாகப்பட்டினம்
Nagai 2017 10 25

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியப் பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 கலெக்டர் ஆய்வு

வேதாரண்யத்தில் ரூ.245 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வேதாரணயம் வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் வகுப்பறைக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்(2016-2017) கீழ் நபார்டு வங்கி மூலம் ரூ.162.41 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆயக்காரன்புலம் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியின் வகுப்பறைக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், கோடியக்கரை பல்நோக்கு பேரிடர் மையத்தில் ரூ.520 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், ஆயக்காரன்புலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.236 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்துள்ள 14 வகுப்பறை மற்றும் ஆய்வகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட கலெக்டர் முனைவர் சீ.சுரேஷ்குமார், பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், சேகர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நாகவேலு, உதவிப் பொறியாளர் வேலுச்சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வட்டாட்சியர் (பொ) ரவி, மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து