யாரும் காசு தராததால் நிஜ வாழ்க்கையில் நடிக்கவில்லை: ரஜினி

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      சினிமா
rajini 2017 10 26

சென்னை : யாரும் காசு தராததால் நிஜ வாழ்க்கையில் நான் நடிக்கவில்லை. சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன் என்று ரஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் இன்று நடைபெறுகிறது.

இதற்காக ரஜினி, எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் துபாய் சென்றுள்ளனர். முன்னதாக, நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ரஜினியிடம், ‘பொது வாழ்க்கையில் இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்களே..?’ என்று ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, “நிஜ வாழ்க்கையில் நடிக்க யாரும் காசு தராததால் நான் நடிக்கவில்லை. எனவே, சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன்” என்று பதில் அளித்துள்ளார் ரஜினி. கடவுளின் கருணையாலும் மக்களின் அன்பாலும்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். '2.0' படத்தில் என்னை நடிக்க வைத்த தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் இயக்குனர் சங்கருக்கு நன்றி. பெருமைமிக்க இந்தப் படத்தின் ஒரு பங்காக நான் இருப்பதில் மகிழ்ச்சி. '2.0' வெளியான பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் படத்தைக் கொண்டாடுவர்’ என்றார். படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “படத்தில் மொத்தம் 3 பாடல்கள் உள்ளன. இரண்டு பாடல்கள் நாளை வெளியிடப்படும். இன்னொரு பாடல் பின்னர் வெளியிடப்படும். இவை இல்லாமல் படத்தின் தீம் கலந்து சின்னச் சின்ன பாடல்கள் நிறைய இருக்கும்” என்றார்.

Kolamavu Kokila(CoCo) Movie Review | Nayanthara | Yohi babu | Anirudh | Nelson

World's ugliest pug!! See for yourself!

கட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்

கண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்

அழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

வீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil

Racing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து