முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி பார்வையிட்டு, நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார்

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      திருவள்ளூர்
Image Unavailable

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி திருவள்ளுர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சிறப்பு முகாம்களை பார்வையிட்டு, நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார்.

 நிலவேம்பு குடிநீர்

திருவள்ளுர் நகராட்சி, இந்திரா நகர் பகுதியில் நடைபெற்ற காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு பணிகள் குறித்த சிறப்பு முகாமினை வீடு, வீடாகச் சென்று பார்வையிட்டு;, அங்குள்ள தேவையற்ற பொருட்களை அகற்றிடுமாறு சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், அருகிலுள்ள காலியிடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். காலியிடங்களில் குப்பைகளை போடுபவர்கள் மீது சுகாதார துறை மற்றும் உள்ளாட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் கூறினார்.

திருவள்ளுர் ஊராட்சி ஒன்றியம், சேலை கிராமத்தில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு குறித்த சிறப்பு முகாமினை பாhர்வையிட்டு, நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கி, நிலவேம்பு குடிநீரில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் நிலவேம்பு குடிநீரை அருந்த வேண்டும் என தெரிவித்தார். சேலை கிராமத்தில் நிலத்தடி நீர்தேக்க தொட்டியில் தேக்கி வைத்துள்ள நீரை அப்புறப்படுத்துமாறும், தேவையற்ற டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நீர்தேங்குவதற்கு ஏதுவாக இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள், தூய்மை காவலர்கள் மற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின்போது துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு. ஜே.பிரபாகரன், திருவள்ளுர் நகராட்சி ஆணையர் செந்தில்குமரன், திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் கெ.ரா.திவ்யஸ்ரீ, திருவள்ளுர் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து