ஆசிரியரை தெய்வமாக வணங்குங்கள் கே.வி ராமலிங்கம்எம்எல்ஏ பேச்சு

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      ஈரோடு
26-10-17 erode admk photo no1

ஈரோடு கிழக்கு தொகுதிக்குற்பட்ட  பெருந்துறை ரோட்டில்  ரூ 5லட்சம்  மதிப்பிலும்,குமலன் குட்டைபகுதியில் ரூ4 லட்சம் மதிப்பிலும்,கருங்கல் பாளையம்பகுதியல் ரூ5 லட்டம்மதிப்பில் பயனியர் நிழற்குடை அமைத்தக்கும்53 வது வார்டில்ரூ13 லட்சம் செலவில் குழந்தைகள் சத்துணவு மையகட்டத்திற்கு பூமி பூஜை ஆகியவை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மாவட்ட கழக செயலாருமான கே.வி ராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ கே.ஏ. தென்னரசு முன்னிலை வகித்தார்.தொடர்ந்து  ஈரோடு கருங்கல் பாளையம் அரசு ஆண்கள் -பெண்கள் மேல்நிலைப்பள்ளி,அருள்நெறி திருப்பணிமன்ற மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்358 பேருக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கி கே.வி ராமலிங்கம் எம்.எல்.ஏ  பேசுகையில் ஆசிரியர் பணி அறப்பணியாக மதித்து ஆசிரியர்கள்செய்து வருகின்றார்கள்.

 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாணவ-மாணவியர்முன்னேற்றமே சமுதாயமே  முன்னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு கல்விக்காக ரூ 32 ஆயிரம் கோடியை  ஒதுக்கியுள்ளார். மாணவ-மாணவிகள்  சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காகத்தான் காலனி முதல் மடிகணினி வரையும் விலையில்லாமல் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா  கொண்டு வந்தார்மாதா பிதா,குரு ஆகியோரை மாணவர்கள் மதிக்கவேண்டும்.

தன்நலன்கருதாமல் அறப்பணிசெய்யும் ஆசிரியர் மாணவ-மாணவிகளின் நலன் விரும்பிதான் கண்டிக்கிறார்கள்.உங்கள் எதிர்காலநலனுக்காக பாடுபடும் ஆசிரியரை தெய்வமாக வணங்குங்கள்  , மதியுங்கள் அப்போது நீங்கள் வாழ்வில் அனைத்து முன்னேற்றமும் அடைய முடியும்.இவ்வாறு அவர் பேசினார் இதில் மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான், மாநகராட்சிபொறியாளர் விஜய குமார், பகுதிசெயலாளர்கள் கே.சி பழனிசாமி, மனோகரன்,கேசவமூர்த்தி,சூரம்பட்டி ஜெகதீசன், ஜெயராஜ், முருகுசேகர், கோவிந்தராஜன், நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார், ஜெயபாலாஜி,சுகாதார ஆய்வாளர் நல்லசாமி, மற்றும் பலர் பங்கேற்றனர்

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து