காஞ்சிபுரம் மாவட்டம் டெங்கு மேலாண்மை பயிற்சி மற்றும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      காஞ்சிபுரம்
Kanchipuram 2017 10 26

காஞ்சிபுரம் மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் டெங்கு மேலாண்மை பயிற்சி மற்றும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மதுராந்தகம் நவரத்னா மஹால் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது.

 நடவடிக்கை

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், நாம் அனைவரும் டெங்கு மற்றும் அனைத்து விதமான காய்ச்சலை வராமல் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றம் அதனை குணப்படுத்த முக்கியமான பணிச்சூழலில் அனைவரும் உள்ளோம். அனைவரும் இதனை உணர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றினால்தான் இதனை முற்றிலும் ஒழிக்க முடியும். காய்ச்சலுக்காக ஒருவர் சிகிச்சைக்கு வந்தால் அவருக்கு எத்தனை நாளாக காய்ச்சல் உள்ளது வேறு எங்கெங்கு இதற்கு சிகிச்சை எடுத்துள்ளார் என்கிற அனைத்து விவரங்களையும் அவருடைய பதிவு செய்ய வேண்டும். மேலும் ஒருவருக்கு 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் வெளிநோயாளியாக சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனையில் அனுமதித்து உள்நோயாளியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

தில் அரசு, தனியார் மருத்துவமனைகள் அனைவரும் பின்பற்ற வேண்டும். அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், உடனடியாக காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படுவதில்லை காரணம் அவர்களுக்கு உடனடியாக ரத்ததில் தட்டனுக்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளும் இதில் கவனத்துடன் செயல்பட வேண்டும். தேவையான அவசியமான சிகிச்சை முறைகள் கடைபிடிக்க வேண்டும். செல் எண்ணிக்கை குறித்த பிரிண்ட் கேஸ் சீட்டுடன் இணைக்கப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் வந்து குணமாகிவிட்டது என்பவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எந்தெந்த இடங்களில் காய்ச்சல் பிரச்சனை உள்ளது என்பதை தகவல் அளித்து டெங்கு கொசு வளர்வதற்கு உரிய ஆதாரங்கள் இருந்தால் அதனை தெரிவிக்க வேண்டும். நோய் குறித்த சந்தேகங்கள் இருந்தாலும் அதனையும் தீர்த்துக்கொள்ள வேண்டும். இதனை அரசு, தனியார், அரசு ஆரம்ப சுகாதார மருத்துமனைகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும்.

இதற்கு தகவல் அளிக்க வேண்டிய வாட்ஸ் அப் எண்கள் பெருமாள்:9444045529 வெங்கடேசன்:9488500164 மாவட்ட நிர்வாகம் சார்பில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காய்ச்சலுக்கு காரணமாக உள்ள கொசுப்புழு உற்பத்தி நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவரப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. மக்களுக்கும் உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் நம்வீடு மற்றும் நிறுவனங்கள், மருத்துவமனைகள் இருக்கக்கூடாது .சுத்தமான தண்ணீரில் தான் டெங்கு கொசு வளர்கிறது. தனியார் மருத்துவமனைகளில் உரிய பதிவு பெற்ற மருத்துவர்கள் இல்லாமல் வேறு சாதாரண தகுதியற்ற ஆட்களை கொண்டு சிகிச்சை அளித்தால் அம்மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவனத்தின் டெங்கு மேலாண்மை குறித்த கையேடு மற்றும் காய்ச்சலால் இறப்பு நேர்ந்தால் மருத்துவமனையை தணிக்கை செய்வதற்கான அரசாணையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் மதுராந்தகம் சார் ஆட்சியர் கிள்ளி சந்திரசேகர்., இணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.சுந்தரராஜன், துணை இயக்குநர்கள் மரு.செந்தில்குமார், மரு.பழனி மற்றும் இந்திய மருத்துவ கழக பிரதிநிதிகள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் அனைத்து களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து