முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில போட்டிகளில் வெற்றிபெற்ற மதுரை விளையாட்டு விடுதி மாணவர்களை பாராட்டி அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ - பாலகிருஷ்ணாரெட்டி பரிசுகள் வழங்கினர்

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை, -       60வது குடியரசு தினம் மற்றும் 35வது பாரதியார் தின மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகளம் மற்றும் கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மதுரை விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு பாராட்டு விழாவில் மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ,  இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.
 மதுரை மாவட்டம், டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கத்தில் 60வது குடியரசு தினம் மற்றும் 35வது பாரதியார் தின மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகளம் மற்றும் கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மதுரை விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு பாராட்டு விழாவில் மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பரிசுகளை  வழங்கினார்கள்.
 இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-
 மாநில அளவில் பள்ளிகளுக்கிடையேயான தடகளம் மற்றும் கூடைப்பந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று மதுரைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விருது கிடைத்தது பெரு மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த ஆண்டு இதே போல் முயற்சி எடுத்து வெற்றி பெற வேண்டும்.  முயற்சியால் தான் வெற்றி பெற முடியும் என்ற நோக்கத்தோடு மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற போராட வேண்டும். 
 தமிழ்நாட்டு மக்கள் தேசிய அளவிலும், ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்ல வேண்டும் என்று தான் அவர்களை ஊக்குவிப்பதற்காக அம்மா அவர்கள் இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிக நிதி ஒதுக்கினார்கள்.  சமீபத்தில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு ரூ.14 இலட்சம் ஊக்கத்தொகையாக வழங்கியது. 
 தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவிகளை செய்ய தயாராக இருக்கிறது.  இளமை பருவத்தை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற விடாமுயற்சி கண்டிப்பாக தேவை.  இவ்விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர் மற்றும் பெற்றோர்களுக்;கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
        இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தெரிவித்ததாவது:-
 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கம் மிகவும் பழமை வாய்ந்த விளையாட்டரங்கம் ஆகும். மதுரை மாவட்டத்தில் தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்கிய பெருமை மதுரை விளையாட்டரங்கிற்கு உண்டு.   தமிழக  முன்னாள்  முதலமைச்சர்   அம்மா நாள்தோறும்  விளையாட்டு விடுதி உணவுபடியை ரூ.75-லிருந்து ரூ.250 - ஆக உயர்த்தி வழங்கியுள்ளார்கள்.
  தமிழக  முன்னாள்  முதலமைச்சர்  அம்மா  முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளை அறிமுகப்படுத்தி, மாநில அளவில் முதலிடம் பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ. 1 லட்சமும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ75 ஆயிரமும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ,50,000 ஆயிரமும், மதுரை மாவட்டத்தில் மாநில அளவிலான தடகளப் போட்டியில்  271  வீரர்கள், 254 வீராங்கனைகள் ஆக மொத்தம் 525 கலந்து கொண்டனர்.  வெற்றிபெற்ற 30 வீரர்கள், 30 வீராங்கனைகளுக்கு ரூ. 45 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
          தமிழக  முன்னாள்  முதலமைச்சர்  அம்மா கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் ஏற்படுத்திட, தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம பஞ்சாயத்துகளிலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ரூ.25.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழக  முன்னாள்  முதலமைச்சர்  அம்மா பள்ளிக்கல்வித் துறை மூலம் நடத்தப்படும் பாரதியார் தின , குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் முதல் மூன்று இடங்கள் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.600 - ரூ.400, ரூ.200, என்ற ஊக்க உதவித்தொகையினை இரட்டிப்பாக்கி ரூ.1200, ரூ.800, ரூ.400 வழங்க ஆணை பிறப்பித்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்  தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.இராஜன்செல்லப்பா, அ.தி.மு.க.மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணை தலைவர் சோலைராஜா, மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் புதூர்துரைப்பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் வில்லாபுரம் ஜெ.ராஜா, பகுதி கழக செயலாளர் அண்ணாநகர் எம்.என்.முருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மாரிமுத்து உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து