பவானிசாகர் அணை கட்ட முயற்ச்சி எடுத்த தியாகி எம்.ஏ.ஈசுவரன் பிறந்தநாள் விழா

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      ஈரோடு
DSC00081 0

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, கோபி பகுதியில் கீழ்பவானி அணை கட்ட முயற்சி எடுத்த தியாகி எம்.ஏ.ஈசுவரன் அவர்களின் 123வது பிறந்த நாள்விழா கொண்டப்பட்டது.

கவுந்தப்பாடியில் கிழ்பவானி பாசன சபை அலுவலகம், நால்ரோடு பகுதியில் பவானிசாகர் அணைகட்ட முயற்சி மேற்கொண்ட ஈரோடு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் தியாகி எம்.ஏ.ஈசுவரன் அவர்களின் 123வது பிறந்த நாள்விழா கே.ஆர்.லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. பி.சி.செங்கோட்டையன் முன்னிலை வகித்தார். விழாவில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு இணை செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி, கரும்பு வளர்ப்போர் சங்க செயலாளர் பா.அ.சென்னியப்பன், யு8ஏ தலைவர் வி.ஆர்.குமார், பொருளாளர் பி.கே.குப்புசாமி, யு8பி தலைவர் பி.ஆர். ஏகாம்பரம், பொருளாளர் எம்.என்.சுப்ரமணியம், யு9 பொருளாளர் கே.எம்.வாரணவாசி, யு10 தலைவர் அ.செ.பழனிசாமி, செயலாளர் எஸ்.எம்.சுப்ரமணியம், யு7 தலைவர் தங்கமுத்து, பொருளாளர் எஸ்ஏ.பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவுந்தப்பாடி சுகர் காம்ப்ளக்ஸ், கோபி குள்ளம்பாளையம் பாசனசபை அலுவலகம், கோபி பெரியார்திடல், பேருந்து நிலையம் பகுதிகளில் எம்.ஏ.ஈசுவரன் படத்து மாலை அணிவித்து விவசாயிகள் மரியாதை செய்தார்கள். நிகழ்ச்சியில் ம.தி.மு.க மாவட்ட செயலாளர் கந்தசாமி, மருத்துவர் அணி விஜயகுமார், பாசனசபை நிர்வாகிகள் எம்.ஏ.பழனிசாமி, எஸ்.ஏ.பெருமாள், கே.கே.குணசேகரன், கே.ரவீந்திரன், சதாசிவம், சி.தேவணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து