முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமானவரி அலுவலகத்தில் விஷால் ஆடிட்டர் ஆஜர்

வெள்ளிக்கிழமை, 27 அக்டோபர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, நடிகர் விஷால் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டதை அடுத்து வருமானவரி அலுவலகத்தில் விஷால் ஆடிட்டர் நேற்று நேரில் ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

மெர்சல்’ பட சர்ச்சை தொடர்பாக திரை உலகினர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். விஷாலும் மெர்சல் படத்தை மறு தணிக்கை செய்யக்கூடாது என்றார். இந்த படத்தை இணையதளத்தில் பார்த்ததாக கூறிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு விஷால் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி விஷால் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
‘மெர்சல்’ படத்துக்கு விஷால் ஆதரவு தெரிவித்ததால் தான் இந்த சோதனை நடந்ததாக விமர்சனம் எழுந்தது. அதிகாரிகள் இதை மறுத்தனர். இதற்கு பதில் அளித்த விஷால், “நான் முறைப்படி வருமான வரி செலுத்தி வருகிறேன். எந்த பிரச்சினை என்றாலும் சந்திக்க தயார்” என்று கூறினார். இதையடுத்து, விஷால் நேற்று சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.

வருமானவரி பிடித்த தொகை ரூ.51 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது. அதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். வரி செலுத்துவது தொடர்பான கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று 24-ம் தேதி வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து விஷாலின் ஆடிட்டர் ஸ்ரீதர் நேற்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அப்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து