முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் திருக்கோயிலில் 6 புனித தீர்த்தங்கள் இடம் மாற்றம்: புதிய தீர்த்தக்கிணறு அமைக்க திருக்கோயில் வளாகத்தில் பூமி பூஜை.

வெள்ளிக்கிழமை, 27 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம் - ராமேசுவரம் திருக்கோயிலில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த 6 புனித தீர்த்தக்கிணறுகள்  நிர்வாகம் மாற்றப்படவுள்ளதையொட்டி புதிய புனித தீர்த்தக்கிணறு அமைப்பதற்காண பூமி பூஜை திருக்கோயில் வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் தினசரி பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் திருக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களும், கிழக்கு பகுதியில் அமைந்துள்ள 6 புனித தீர்த்தக்கிணற்கு புனித தீர்த்தம் நீராட செல்லும் பக்தர்களும் சேர்ந்து செல்லும் சூழ்நிலைகள் அமைந்துள்ளது.இதனால் சுவாமி தரிசனம் செல்லும்  பக்தர்கள் முக சுழித்து செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது.இதனையொட்டி தனி நபர் வழக்கறிஞர்கள் பொது நலம் கறுதி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள புனித தீர்த்தக்கிணறுகளை மாற்றம் செய்து தீர்த்தம் மற்றும் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் சந்திப்பு ஏற்படாத வகையில் அமைக்க வேண்டும்  வழக்கு தொடர்ந்தனர்.இதனையொட்டி நீதிமன்றம் இவ்வழக்கை விசாரணை செய்து பக்தர்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள மஹாலெட்சுமி,காய்த்ரி,செளத்ரி,சரஸ்வதி,சங்கு,சக்கரம் ஆகிய 1 முதல் 6 வரையிலான 6 புனித தீர்த்தங்களை மாற்றம் செய்ய திருக்கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவுயிட்டது.இதனையொட்டி கிழக்கு கோபுர நுழைவு வாயில் பகுதியில் இருந்த இந்த 6 புனித தீர்த்தங்களையும் மாற்றம் செய்ய திருக்கோயில் நிர்வாகம் அதிகாரி இணை ஆணையர் மங்கையர்ககரசி தலைமையில் அதிகாரிகள்  கடந்த சில நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததால் புனித தீர்த்தக்கங்கள் அமைக்கும் பணிகள் பூமி பூஜையுடன் நேற்று தொடங்கியது. 

 6 புனித தீர்த்தக்கிணறுகள் அமைக்க பூமி பூஜை.
 திருக்கோயில் இராண்டாம் பிரகாரம் பகுதியில் தற்போது அமைந்துள்ள 13 ஆவது தீர்த்தமான பிரம்மஹத்யாதி அருகில் 6 புனித தீர்த்தக்கிணறுகள் அமைக்க பூமி பூஜை நேற்று நடைபெற்றது.இப்பூஜையையொட்டி நேற்று அதிகாலையில் கணபதி பூஜைகளுடன் தொடங்கி வாஸ்து செய்யப்பட்டு,கலசத்தில் புனித தீர்த்தம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் திருக்கோயில் மூத்த குருக்கள் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.அதன் பின்னர் பூஜையில் கலசத்தில் வைக்கப்பட்ட புனித நீரால் புதியதாக அமைக்கப்படவுள்ள புனித தீர்த்தக்கிணறு தொண்டும் பகுதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் அப்பகுதியில் கோயில் குருக்கள்களால்  சிறப்பு மந்திரம் வாசிக்கப்பட்டு,சிறப்பு தீபாராதணையும் நடைபெற்றது.இந்த பூஜையில் திருக்கோயில் தக்கார் குமரன் சேதுபதி,திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி,உதவி ஆணையர் பாலகிருஷ்ணன்,திருக்கோயில் உதவிக்கோட்டபொறியாளர் மயில்வாகனன், திருக்கோயில் முன்னாள் அறங்காவலர்குழு உறுப்பினர் நாரயணன்,திருக்கோயில் மேலாளர் முருகேசன்,கண்காணிப்பாளர்கள் ககாரீன்ராஜ்,பாலசுப்பிரமணியன்,இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன்,பேஷ்கார்கள் கண்ணன்,கலைச்செல்வம்,திருக்கோயில் ஒப்பந்தகாரர் சுந்தரம் உள்பட திருக்கோயில் அலுவலர்களும்,ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

 பக்தர்களின் பாதுகாப்பிற்கு ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய தீர்த்தக்கிணறு அமைக்க நடவடிக்கை இணை ஆணையர் தகவல்.
 புதியதாக மாற்றம் செய்துள்ள 6 புனித தீர்த்தக்கிணறுகள்  ரூ.12 லட்சம் மதிப்பில் பக்தர்களின் பாதுகாப்பிற்கேற்ப அமைக்கவும், திருக்கோயில் வடக்கு மற்றும் தெற்கு பகுதி நுழைவு வாயில் மற்றும் திர்த்தக்கிணற்றை சுற்றியும் வலுவலுப்பற்ற பேவர் கல் ரூ.18 லட்சம்  மதிப்பில் அமைப்படும். மேலும் இப்பணிகளும் விரைவில்  நடைபெறவுள்ளது.மேலும் புதிய தீர்த்தக்கிணறு தொண்டும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் மாசி மாதம் சிவராத்திரி தினத்தில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் புதிய தீர்த்தக்கிணறுகள் பயன் பாட்டிற்கு வரும் நிலையில் திருக்கோயிலிலுள்ள 22 புனித தீர்த்தங்களின் வரிசை எண்கள் மாற்றம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து