முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெள்ளிக்கிழமை, 27 அக்டோபர் 2017      தேனி
Image Unavailable

  தேனி.-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்   விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்,   தலைமையில் நடைபெற்றது. வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி வேளாண்மை இயக்குநர், சென்னை அவர்களால் பொதிகை சேனலில் காண்பிக்கப்பட்ட நேர்காணல் நிகழ்ச்சி விவசாயிகளுக்கு திரையிடப்பட்டது. மேலும் துறை சார்பில்  செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த  மின்னணு திரை மூலம் (Pழறநச Pழiவெ) காண்பிக்கப்பட்டது.

கூட்டத்தில், சண்முகாநதியில் அமைக்கப்பட்டுள்ள வேலியை சிறிது திறந்துவிட்டு கால்நடைகள் அதன் வழியாகச் சென்று நீர் அருந்த வழிவகை செய்திடவும், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்கிடவும், ஊத்தாம்பாறை  கிராம பகுதியில் பாதை வசதி செய்து தரப்பட வேண்டும் எனவும், சுரங்கலாறு நீர்வீழ்ச்சியில் தடுப்பணை கட்டித்தரவும், 2017-2018-ம் ஆண்டிற்கு கம்பம் மேற்கு பகுதியிலுள்ள மலை மாடுகளுக்கு இலவச மேய்ச்சல் சீட்டு விரைந்து வழங்கிடவும், பெரியகுளம் பகுதியில் ஆரஞ்சு பழக்கன்றுகள் விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்திடவும், கடந்த ஆண்டு மழை பொய்த்துப் போனதால் தென்னை மரங்கள் கருகிவிட்டதால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையினை உயர்த்தி வழங்கிடவும், கூட்டுறவுத் துறையின் மூலம் தனி நபர் கடன் மற்றும் கூட்டுறவு பால் கடன்  பெறுவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைக் களைந்திடவும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் முன் வைத்தனர்.
 கூட்டத்தில் விவசாயிகள், விவசாய பிரதிநிதிகளால் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு  உரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்,  வழங்கினார்.
 கம்பூசியா மீன் குஞ்சுகளை அதிகமாக உற்பத்தி செய்து நீர் தேங்கும் இடங்களில் வளர விட்டு கொசு லார்வாக்களை அழித்திடவும், குளங்கள், கண்மாய்கள், நீர்த்தேக்கங்களில்  இறந்த பிராணிகள்,  கழிவுப் பொருட்கள் போன்ற மாசு ஏற்படுத்தும் பொருட்களை நீர்நிலைகளில் போடுபவர்கள் மற்றும் மீன் பிடிப்பதற்காக நீர்நிலைகளை வெட்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஓரளவிற்கு தண்ணீர் இருப்பு பெறப்பட்ட பின்பு, புதிய ஆயக்கட்டு பகுதிக்கும் தண்ணீர் திறந்து, அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர் நிலைகள் மற்றும் குளங்களில் நீர் மட்டம் உயர வழிவகை செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.
 மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், வடகிழக்கு பருவ மழை தற்போது பெய்து வருவதால், கண்மாய்கள் மற்றும் குளங்களில் நீர் வரத்து இருக்கின்றது பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதைப் பயன்படுத்தி விவசாயப் பணிகள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்கள், உரங்கள் மற்றும் கலப்பு உரங்கள் பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் நெல் விதைகள் போதுமான அளவிற்கு இருப்பு உள்ளது. எனவே, விவசாயிகள் குறைந்த நீரினைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறக்கூடிய  வேளாண்மை பயிர்களை பயிரிட்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்,   தெரிவித்தார்.
 தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட சின்னமனூர், போடி, கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளில் தங்கியுள்ள மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு துறை சார்ந்த பணிகள் மற்றும் விவசாயிகளின் தேவைகள் பற்றி அறிந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து