தணிகைபோளுரில் ரூ36லட்ச மதிப்பில் பள்ளிசுவர், நான்குவகுப்பறை கட்டிடம்; எம்எல்ஏ,சு.ரவி, எம்பி.கோ.அரி திறந்தனர்

வெள்ளிக்கிழமை, 27 அக்டோபர் 2017      வேலூர்
Dt  28  Akm   Poto

தணிகைபோளுர் கிராமத்தில் ரூ36 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சுவர், மற்றும் நான்கு வகுப்பறை கட்டிடங்களை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, எம்பி. கோ.அரி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். இது குறித்து விரிவான விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம்;;. அரக்கோணம் வட்டத்தில், தணிகைபோளுர் ஊராட்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2016-17ஆம் ஆண்டு அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் கூடுதல் நான்கு நவீன தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகள் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறை கட்டிங்கள் ரூ26.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அத்துடன், சட்டமன்ற உறுப்பினர் நிதி; ரூ10 லட்சம் மதிப்பீட்டில் சுற்று சுவர் கட்டுமான பணிகளும் நிறைவேற்றப்பட்டது.

திறப்புவிழா

இதன் திறப்புவிழா நேற்று வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி தலைமை தாங்கி குத்து விளக்கேற்றினார். தலைமை ஆசிரியர் புண்ணியகோட்டி வரவேற்று பேசினார். பிடிஏ. துணை தலைவர் பிரவின்குமார், பொருளாளர் ஆனந்தன், உறுப்பினர்கள் என்.தாஸ், ஆர்.மாசிலாமணி மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் எம்பி அரி கூடுதல் நான்கு வகுப்பறை கட்டித்தினை திறந்து வைத்தார்.

முன்னாள் திருத்தணி நகர மன்ற தலைவர் சௌந்தராஜன், முன்னாள் பஞ்.தலைவர்கள் சரளாபிரவின், மோகனா, அரக்கோணம் ஒன்றியத்தைச் சேர்ந்த தணிகைபோளுர் ஜிஎம்.மூர்த்தி, கீழ்குப்பம் ஏ.எல்.நாகராஜன், அருள், முத்தப்பன், கணேசரெட்டி, பொய்பாக்கம் மீனா, எம்ஆர்எப். அண்ணா தொழிற் சங்க தலைவர் ஜனார்தனன், மற்றும் கல்வி குழு உறுப்பினர்கள் ஆர்.கலைமணி, வெங்கடேசன், அம்பிகாமாதவன், உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கிராம பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். பள்ளிக்கு நிலம், மற்றும் நிதியும் வழங்கிய பொதுமக்கள் அனைவருக்கும் நினைவு பரிசு, பாராட்டுக்களை கூட்ட மேடையில் அறிவித்து கௌரவபடுத்தபட்டனர். இறுதியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஈ.பிரகாஷ் நன்றி கூறினார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து