குடிநீர் தொட்டிகள் மற்றும் வீட்டு மேற்கூரை பகுதிகளை சுத்தமாக வைத்திருக்காத வீட்டு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்: கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 27 அக்டோபர் 2017      கிருஷ்ணகிரி
2

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சிக்குட்பட்ட துரைஸ் நகர் பகுதி மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை கலெக்டர் சி.கதிரவன் நேற்று ( 27.10.2017) நேரில் ஆய்வு செய்தார்.

மின் இணைப்பு துண்டிப்பு

 

பர்கூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண் 8 - பகுதியைசேர்ந்த துரைஸ்நகர், ஜெகதேவி ரோடு, செட்டியார் தெரு, துரைஸ்நகர் காலனி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வீடு வீடாக சென்று நீர்தேக்க தொட்டியில் லார்வா புழுக்கள் உள்ளனவா என்பதையும், ஆய்வு செய்து குடிநீர் தொட்டிகளில் அபேட் மருந்து தெளிக்கும் பணிகளையும், வீடுகளின் மேற்கூரைகளில் வைக்கப்பட்டிருந்த தேங்காய் மட்டைகள், பழைய டயர்கள், பிளாஸ்டிகள் கழிவுகள், காலி டப்பாக்கள் ஆகியவற்றை பேரூராட்சி பணியாளர்களை கொண்டு அகற்றும் பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து புதிய கட்டுமான பணிகள் மேற்கொண்டுவரும் அடுக்கு மாடி, தொழிற்சாலை கிடங்கு மற்றும் வீடுகள் என 12 உரிமையாளர்களுக்கு ரூ. 1 லட்சத்து 58 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கலெக்டர் தெரிவிக்கும் போது:

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குடிநீர் தொட்டிகள், மற்றும் வீடுகளின் மேற் கூரைகளில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான வீடுகளின் மேற்கூரைகளில் தேங்காய் மட்டைகள், பிளாஸ்டிக் கழிவுகளை வைத்துள்ளனர். அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். தொடர்ந்து வீட்டு பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளாத வீட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதோடு வீட்டின் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என பொதுமக்களிடம் கலெக்டர் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அருண், துணை இயக்குநர் ( சுகாதார பணிகள்) மரு. பிரியாராஜ், பர்கூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு. உதயசூரியன், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் நடேசன், வட்டாட்சியர் தணிகாசலம், பேரூராட்சி செயல் அலுவலர் பெருமாள், உதவி பொறியாளர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பையாஸ்அகமது மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து