கூடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.3.95 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்

வெள்ளிக்கிழமை, 27 அக்டோபர் 2017      நீலகிரி
27ooty-1

கூடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ரூ.3 கோடியே 95 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட ராக்வுட் பகுதியில் மகாத்மாக காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.22 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் நடைபாதை பணியினையும், பழையூர் பகுதியில் ரூ.10.00 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய பணியினையும், கொள்ளச்சல் முதல் பனிக்கல் வரை ரூ.17.20 லட்சம் மதிப்பில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்று வரும் சாலை பணியினையும், பிரதான் மந்திரி சதக்யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.273.20 லட்சம் மதிப்பில் முக்கட்டி முதல் பக்கானா வரை 6.10 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்று வரும் சாலை பணியினையும், தாய் திட்டத்தின் கீழ் ரூ.25.03 லட்சம் மதிப்பில் குன்னலாடி முதல் புளியாடி வரை 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்று வரும் சாலை பணியினையும், அம்பலமூலா பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையத்தினையும், அய்யன்கொல்லி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் சத்துணவு கூடம் மற்றும் பொருட்களின் தரத்தினையும், இருப்பினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

மேலும் சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட இண்டிகோ நகர் பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையத்தினையும், மாசாவன் சேரம்பாடு பகுதியில் ரூ.5.20 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பம்ப் அறை மற்றும் குழாய் அமைக்கும் பணியினையும் மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்து நெலாக்கோட்டை மற்றும் சேரங்கோடு பகுதியில் வாழும் பழங்குடியின மக்களிடம் அவர்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார். மேலும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனடியாக பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Seema Raja - Movie Review | Sivakarthikeyan | Samantha | keerthy suresh

Seema Raja | Public Review Opinion | சீமராஜா திரைப்படம் ரசிகர்கள் கருத்து

Kozhukattai Recipe in Tamil | Modak Kolukattai Recipe in Tamil | Pooranam Recipe | Sweet Kolukattai

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து