கோபியில் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 28 அக்டோபர் 2017      ஈரோடு
28 10 2017 ph 2

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்  தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.18.75 இலட்சம் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், ரூ.11 இலட்சம் மதிப்பீட்டிலான இரு வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்கள்.

ஈரோடு மாவட்டம பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு 2017-18 நிதியின் கீழ் வார்டு எண்.6 கோசாலை நகர் பகுதியில் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.2 ராமர் எக்ஸ்டன்சன்-6 பகுதியில் ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.3 ராமர் எக்ஸ்டன்சன்-7 பகுதியில் ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண் 11 சீனிவாசன் வீதியில் ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.12 கள்ளிப்பட்டி ரோடு பகுதியில் ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டிலும், ஸ்ரீநகர் பகுதியில் ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.10 புதுச்சாமி கோவில் வீதி பகுதியில் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.24 குப்பம்மா லே அவுட் பகுதியில் ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.27 தண்டு மாரியம்மன் கோவில் எதிரில் ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டிலும் என ரூ.18.75 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் பணிகளை தொடங்கி வைத்தும், மொடச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நகராட்சி 2016-17-ம்  கல்வி நிதியின் கீழ் ரூ.11.00 இலட்சம் மதிப்பீட்டில் இரு வகுப்பறை கட்டிடங்களையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  திறந்து வைத்தார். 

 இந்நிகழ்ச்சியில் கோபி வருவாய் கோட்டாட்சியர் .எஸ்.கோவிந்தராஜ், தாசில்தார் பூபதி ,நகராட்சி ஆணையாளர் பார்த்திபன்,கோபி மாவட்ட கல்வி அலுவலர் கலைச்செல்வன்,ஒன்றிய செயலாளர்கள் தம்பி (எ) சுப்பிரமணி,சிறுவலூர் மனோகரன்,மாவட்ட மாணவரணிச் செயலாளர் பிரினியோ கனேஷ்,முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் கந்தNவுல் முருகன் ரேவதிதேவி,வாhடு செயலாளர் செல்வராஜ்,அருள் ராமச்சந்திரன்,அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து