முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது

சனிக்கிழமை, 28 அக்டோபர் 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் சர்வதேச விமான  நிலையம் அதிநவீன தரத்துடன் விரிவாக்கம் செய்வது தொடர்பாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜாவைத்தியநாதன்  அவர்கள் முன்னிலையில் நில உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பின்னர்  அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது,

தென்னிந்தியாவின் மன்செஸ்டராக விளங்கும் கோவை மாவட்டத்தில் பல நாடுகளிலிருந்து விமானங்களை இயக்க வழிசெய்யவும், அதிநவீன தரத்துடன் கூடிய விமான நிலையமாக மாற்றவும் ஏதுவாக விமான நிலையத்தினை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, நேற்று (27.10.2017)  முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்வது தொடர்பாக மத்திய மாநில அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்தொடர்ச்சியாக,  முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, இன்று கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மத்திய விமான போக்குவரத்துதுறை மற்றும் தமிழ்நாடு தலைiமை செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் மற்றும் நிலஉரிமையாளர்களுடனான நில ஆர்ஜிதம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யும் போது நமது மாவட்டத்தில் விமான சேவையில் பயணியர் போக்குவரத்து மட்டுமல்லாது சரக்குப்போக்குவரத்தும் நடைமுறைபடுத்த ஏதுவாக இருக்கும். மேலும் கோவை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி உயர்வதோடு, தகவல் தொழில்நுட்பத்துறையிலும் ஏற்றம் பெறும். அண்டை மாவட்டமான திருப்பூர் பகுதியின் ஏற்றுமதியானது இதனால் பலமடங்கு உயரும். வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகும். அதிகளவில் புதிய தொழில் துவங்க தொழில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் மையமாக கோயம்புத்தூர் திகழும். அதுமட்டுமல்லாமல், சிங்கப்பூர், கோலம்பூர், மலேசியா மற்றும் வடகிழக்கு ஆசிய நாடுகளுக்கும் தொடர்ந்து அதிகளிவிலான விமான சேவைகளை வழங்குவதால் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தொழில்வளர்ச்சி பெருகி தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திழகழும்.

மேலும், விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிகளான சின்னியம்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நில ஆர்ஜிதம் செய்யவும், நில உரிமையாளர்களுக்கு உரிய மதிப்பீட்டுத்தொகை வழங்கவும் அனைத்து வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மூத்த ஐயுளு அலுவலர்களைக் கொண்ட குழுவும்  முதலமைச்சர் அவர்களால் அமைக்கப்படவுள்ளது. இக்குழு நில உரிமையாளர்களுக்கு உரிய மதிப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும்.
 முற்றிலும் நமது மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டத்த்தின் வளர்ச்சிசார்ந்தே மேற்கொள்ளும் இந்நடவடிக்கைகளுக்கு நில உரிமையாளர்கள் ஒத்துழைக்குமாறும், நிலஉரிமையாளர்களுக்கு உறுதுணையாக அம்மா அவர்களின் அரசு இருக்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன், என  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தெரிவித்தார்.

இவ்வாய்வுக்கூட்டத்தில், இந்திய விமான போக்குவரத்துச் செயலர் ராஜிவ் சௌபே  விமான நிலைய ஆணையத்தலைவர் குருபிரசாத் மகாபாத்ரா  நில நிர்வாக ஆணையர் மோகன் பியாரே  கூடுதல் தலைமை செயலர் ஃ போக்குவரத்துத்துறை செயலர் தேவிதார்  நில நிர்வாக இணை ஆணையர்  விஜயராணி  விமான நிலைய இயக்குநர் ஆர்.மகாலிங்கம் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்  மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன்  உள்ளிட்ட மத்திய மாநில அரசுத்துறை உயர் அலுவலர்கள், நில உரிமையாளர்கள  பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து