விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமான கேம் ஷோ “எஸ்ஆர்நோ”

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      சினிமா
Vijay TV

Source: provided

விஜய் தொலைக்காட்சியில் முற்றிலும் புதிய நிகழ்ச்சி ஒன்று தொடங்கியுள்ளது- எஸ் ஆர் நோ. இந்த நிகழ்ச்சி ஒரு பிரமாண்டமான கேம் ஷோவாக அமைந்தது, சனிக்கிழமைதோறும், இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த எஸ்ஓர்நோ நிகழ்ச்சி எந்த மாதிரியான ஒரு கேம்ஷோ என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது, நம்மில் ஒருநேயரே, ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் 128 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள். இது இந்த நிகழ்ச்சியின் சிறப்பும் கூட. அவர்கள் சொல்லும் எஸ்ஆர்நோ என்ற பதில் பரிசுகளை அள்ளித்தரும். ஒரு புதுவிதமான மற்றும் ஆச்சரிய மூட்டும் திறமையை கொண்டதிறமைசாலிகள் அந்த மேடையில் தங்கள் திறமையை அரங்கேற்றுவார்கள்.

அந்த செயலை அவர்கள் செய்து முடிப்பார்களா என்பதை போட்டியாளர்கள் கணித்து எஸ்ஓர்நோ என்று சொல்ல வேண்டும். அப்படி ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். போட்டியின் இறுதியில் இருக்கும் அந்த ஒரு நபருக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது.


இந்த நிகழ்ச்சிக்கு மேலும் உற்சாகமூட்ட ஒவ்வொரு வாரமும், நான்கு நட்சத்திர போட்டியாளர்கள் கலந்து கொண்டு, போட்டியாளர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.  இப்படி விறுவிறுப்பாக செல்லப்போகும் இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் நமது ஜெகன் அவர்கள். கனெக்ஸன்ஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இந்த நிகழ்ச்சி முற்றிலும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும்க லந்த ஒரு எக்சைட்டிங் கேம் ஷோ நிகழ்ச்சியாக அமையும்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு அம்சமான விஷயம் என்னவென்றால் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்றால் பார்வையாளர்களாக மட்டும் கேம் நிகழ்ச்சிகளில் வரும் நம்மில் ஒருவர்தான். இப்படி போட்டியாளர்களாக கலந்து கொண்டு பல பரிசுகளை தட்டி சென்ற சில போட்டியாளர்கள் அவர்களின் மகிழ்ச்சியை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின், முதல் எபிசோடின் வெற்றியாளர், அஜித்குமார் கூறுகையில், “இந்த நிகழ்ச்சிக்கு நான் எதேர்ச்சியாகதான் நண்பனுடன் கலந்து கொண்டேன்.

இது எந்த ஒரு நிகழ்ச்சி போல நான் பார்வையாளராக இருக்க போகிறேன் என்று நினைத்தேன். ஆனால், பார்வையாளர்கள்தான் போட்டியாளர்கள் என அறிந்தேன். அதிலும் நான் வெற்றி பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இதுவரை என் வீட்டில் இல்லாத என் வீட்டுக்கு தேவையான பொருட்களை வென்றதில் எனக்கு மிகவும் பெருமை மற்றும் சந்தோஷம். ”மேலும் இரண்டாவது எபிசோடில் வெற்றி பெற்ற முகேஷ் கூறுகையில்,

“இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் எனக்கு மிகவும் சந்தோஷம். ஒரு பார்வையாளராகவும் போட்டியாளராகவும் நான் மிகவும் மகிழ்ந்து இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்தேன். திறமைசாலிகள் பெர்பாம் செய்வதை நேரில் கண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இதற்கெல்லாம் மேல் எதிர்பாராத வெற்றி என் குடும்பத்திற்கே இன்னும் சந்தோஷம். ”என்கிறார். இப்படி பல மக்களுக்கு. இந்த நிகழ்ச்சி ஒரு அற்புதமான வாய்ப்பாகவும் அமைகிறது. காணத்தவறாதீர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து