முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஞ்சி உள்ளிட்ட 18 மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 2719 மடிக்கணினிகள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      விழுப்புரம்
Image Unavailable

2016-17ம் ஆண்டில் 12}ம் வகுப்பில் பயின்ற மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணியை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள், கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

2719 விலையில்லா மடிக்கணினி

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வரவேற்றார்.  மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார், ஆரணி எம்எம்.பி.வெ.ஏழுமலை, செஞ்சி எம்எல்ஏ. செஞ்சிமஸ்தான், வானூர் எம்எல்ஏ.சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் செஞ்சி மற்றும் அவலூர்பேட்டை, அன்னமங்கலம், ஆலம்பூண்டி, சத்தியமங்கலம், அனந்தபுரம் உள்ளிட்ட 18 மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2719 விலையில்லா மடிக்கணினியை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, திண்டிவனம் உதவி ஆட்சியர் மெர்சிரம்யா, மாவட்ட கல்வி அலுவலர் ஏகாம்பரம், திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திலகவதி, செஞ்சி, வல்லம், மேல்மலையனூர் அதிமுக ஒன்றிய செயலர்கள்  அ.கோவிந்தசாமி, கு.விநயகமூர்த்தி, ஆர்.புண்ணியமூர்த்தி, அனந்தபுரம் நகர செயலர் ஹரிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து