ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரூ.10 லட்சம் - விஷால் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      சினிமா
vishal 2017 7 1

சென்னை : ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய, ரூ.10 லட்சத்தை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் அளிக்கிறார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய அமெரிக்கவாழ் தமிழர்களான, மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன. ஆனால் 8 கோடிப் பேர் பேசும் தமிழுக்கு இல்லை என்பது கவலைப்பட வேண்டிய விஷயம். தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு நன்றி. எனது சார்பில் 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறேன். உலகளாவிய தமிழர்கள் ஒன்றுபட்டு இதற்கான நிதி விரைவில் சேர, உதவ வேண்டும் என்றும் மத்திய அரசும் இந்த வரலாற்று சிறப்புக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து