முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 4 மருத்துவர்கள் மற்றும் 10 பயிற்சி மருத்துவர்கள் நியமனம் : மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.சாரதா தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.சாரதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

 புதிய டாக்டர்கள் நியமனம்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அரசு மருத்துவ உயர் அலுவலர்கள் டெங்கு காய்ச்சல் சம்மந்தமாக ஆய்வு செய்து வருகின்றனர். அதனடிப்படையில் 24.10.2017 அன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கல்வி இணை இயக்குநர் மரு.சபிதா, மரு.டிட்டோ (பொதுமருத்துவம்), மரு.மதிவாணன் (குழந்தைகள் நல மருத்துவர்) ஆகியோர் வருகை தந்து காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார்கள்.

இக்குழுவினர் மருத்துவமனையில் உள்நோயாளிகள் படுக்கை வசதி, ஆய்வக வசதி, மருந்து வசதி மற்றும் மருத்துவர்கள், செவிலியாகள் எண்ணிக்கை ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்கள். நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்த மருத்துவ உயர் அலுவலர்கள் குழுவினர் காய்ச்சல் மற்றும் டெங்கு சிகிச்சை ஆகியவற்றை உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி சிறப்பாக மேற்கொண்டதற்காகவும், மருத்துவமனையை சுத்தமாக பராமரித்து வருவதற்காகவும், மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்கள். இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மேலும் சிறப்பாக செயல்படுவதற்காக மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளில் இருந்து 4 மருத்துவர்களையும், 10 பயிற்சி மருத்துவர்களையும் அனுப்ப ஏற்பாடு செய்வதாக மருத்துவ உயர் அலுவலர்கள் தெரிவித்திருந்தார்கள்.

அதனடிப்படையில் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்தவக்கல்லூரிக்கு 4 மருத்துவர்களும், 10 பயிற்சி மருத்துவர்களும் வருகை தந்து மருத்துவ பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று மருத்துவக்கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து