வல்லம் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை : கலெக்டர் ஆ.அண்ணாதுரை நேரில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      தஞ்சாவூர்
Thanjair 2017 10 29

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பேரூராட்சி பகுதிகளில்; டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று (29.10.2017) நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 கலெக்டர் ஆய்வு

வல்லம் பேருந்து நிலையத்தில் டீக்கடை மற்றும் உணவகங்களில் டிரம்களில் பிடித்து வைக்கப்பட்டிந்த தண்ணீரினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடிநீரினை மூன்று நாட்களுக்கு மேல் பிடித்து வைக்கக்கூடாது எனவும், குடிநீர் டிரம்மினை சுத்தம் செய்து தண்ணீர் பிடித்து வைக்க வேண்டுமெனவும் கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார். பேருந்து நிலையம் அருகில் அண்ணா நகரில் டிக்கடை ஆய்வுசெய்த போது பிடித்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டதால், ரூ.500 அபராதம் விதித்தார். அதனை தொடர்ந்து, வல்லம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ஆய்வு மேற்கொ

ண்ட மாவட்ட கலெக்டர் அங்கு பயனற்ற நிலையில் பழைய தொட்டியை பார்வையிட்டு சுத்தப்படுத்த உத்தரவிட்டார். வட்டார மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், செயல் அலுவலர் ஆகியோரிடம் டெங்கு ஒழிப்புக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வந்த நோயாளிகளின் விவரங்கள் குறித்தும், மருந்து இருப்பும் குறித்தும், வல்லம் பகுதியில் உள்ள நோயாளிகளின் விவரம் குறித்தும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியின் சுகாதாரத்தன்மை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், வல்லம் பேரூராட்சி பகுதியில் கோமுட்டி தெரு, அய்ஸ்கூல் ரோடு, நல்ல தண்ணீர் கிணறு ரோடு, மீன் மார்க்கெட், ஊரணி, வல்லம் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், நவீன அரிசி ஆலை, குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் வீடுகள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கிட வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

வல்லம் பகுதியில் உள்ள 40 அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து டெங்கு கொசு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தவும், ஆய்வின் போது டெங்கு கொசுக்கள் கண்டறியப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தவும் கூறினார். இவ்வாய்வின் போது பயிற்சி கலெக்டர் சிபி ஆத்தியா செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இளங்கோவன், மாவட்ட மலேரிய அலுவலர் போத்திபிள்ளை, வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தகுமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெய்மேரி, நிலைய மருத்துவர் டாக்டர் சௌமியா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து