ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் பள்ளி ஆலோசகர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      வேலூர்

வேலூர் மற்றும் திருப்பத்தூர் கல்வி மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட அளவிலான இரண்டாம் நாள் பயிற்சி கருத்தரங்கம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

நிறைவு விழா

நிறைவு விழாவிற்கு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆர்.சரஸ்வதி தலைமை தாங்கினார். வேலூர் கல்வி மாவட்ட அமைப்பாளர் பெ.முருகேசன் வரவேற்றார்.

பள்ளிகளில் ஜேஆர்சி செயல்படும் விதம், குறித்து கல்வி மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் விளக்கஉரையாற்றினார். மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறையின் வேலூர் நிலைய அலுவலர் த.விநாயகம், வி.ஏகாம்பரம், தீயணைப்பு துறை வீரர்கள் சி.ஆறுமுகம்,கு. குமார். காட்பாடி நிலைய வீரர்கள் எ.முருகதாஸ், தே.குமரன், ச.முருகேசன், இரா.கோபலகிருஷ்ணன், ர.சதீஷ்குமார், வி.தீரன், சு.குமரேசன் ஆகியோர் தீ விபத்து ஏற்படும் வழிகள் அதனை தடுக்கும் முன்னெச்சரிகை நடவடிக்கைகள், தீ வகைகள், குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

முதலுதவி விரிவுரையாளர் பெ.முருகேசன் முதலுதவி குறித்து செயல்விளக்கம் அளித்தார். இணை அமைப்பாளர் க.வே.கிருபானந்தம் பேரிடர் மேலாண்மை குறித்தும் ஜெஆர்சி பாடல்களை விளக்கி பாடினார்.

காட்பாடி ஒன்றிய அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ நிலையத்தின் மருத்துவ அலுவலர் என்.சங்கர்கணேஷ் டெங்கு நோய் அறிகுறிகள் குறித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தார்கள்.சேவை என்ற தலைப்பில் திருப்பத்தூர் அரிமா சங்க தலைவர் பி.ஆர்.தேவராஜன் உடல் நலம் என்ற தலைப்பில் குழந்தை மருத்துவ நிபுனர் மருத்துவர் கே.வி.அருளாளன் ஜுனியர் ரெட்கிராஸ் கொடி ஏற்றும் முறை, கொடி வணக்க பாடல், பள்ளிகளில் செயல்பாடுகள் குறித்து மாநில கருத்தாளர் ஜி.கோவிந்தராஜ் ஹோமியோ மருத்துவ நடைமுறைகள் குறித்து மருத்துவர் எஸ்.பூங்கொடி ஆகியோர் பேசினர்.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சா.மார்ஸ், வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் செ.அமுதா, திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலர் என்.சாம்பசிவம் வேலூர் கல்வி மாவட்ட பொருளாளர் ஜி.ராஜேந்திரன், இணை அமைப்பாளர்கள ஜி.மனோகரன், க.வே.கிருபானந்தம், ஆற்காடு அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரயர் மணிவண்ணன், வேலூர் வடக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் எஸ்.எஸ்.சிவவடிவு திருப்பத்தூர் கல்வி மாவட்ட பொருளாளர் எ.ஆனந்தன், இணை அமைப்பாளர்கள் க.குணசேகரன், பி.ஜெகன்நாதன், சி.சுப்பிரமணி, சண்முகசீனிவாசன் கே.வி.குப்பம் வட்டார நிர்வாகி எஸ்.ரகுபதி ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் திருப்பத்தூர் கல்வி மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், நன்றி கூறினார்.

Seema Raja - Movie Review | Sivakarthikeyan | Samantha | keerthy suresh

Seema Raja | Public Review Opinion | சீமராஜா திரைப்படம் ரசிகர்கள் கருத்து

Kozhukattai Recipe in Tamil | Modak Kolukattai Recipe in Tamil | Pooranam Recipe | Sweet Kolukattai

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து