செங்குன்றம் திரையரங்குகளில் உதவி கலெக்டர் திடீர் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      சென்னை
M Varam

செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே செங்குன்றத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான ராதா, பாலா ஆகிய இரண்டு தியேட்டர்கள் உள்ளன. இந்த ஒரு தியேட்டரில் தீபாவளியன்று விஜய் நடித்த மெர்சல் படம் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

2 பேர் மீது மின்சாரம்

தாக்கு அப்போது தியேட்டர் அருகே கட்அவுட்கள் போனர்கள் வைக்கப்பட்டன ஒரு பேனர் சாய்வாக இருந்ததால் தியேட்டர் உரிமையாளர் பேனரை சரி செய்ய ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூர் மண்டலம் புலிகுன்றம் கிராமத்தை சேர்ந்த நாகூர் (வயது 40), செல்வம் (வயது 42) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து சாய்ந்த பேனரை சரி செய்துக்கொண்டிருந்த போது அருகில் இருந்த உயர்ந்த மின் அழுத்த மின்கம்பியில் பேனர் பட்டவுடன் மின்சாரம் தாக்கி நாகூர், செல்வம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் எதிரொலியாக திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் சுந்தரவள்ளி உத்தரவின் பேரில் அம்பத்தூர் உதவி கலெக்டர் (கோட்டாட்சியர்) நேற்று அங்கு வந்து தியோட்டரை ஆய்வு செய்தார். அப்போது தியேட்டரில் உள்ள தீயனைப்பு கருவிகள் பரமரிக்கபடவில்லை கழிபிடங்கள் சுகாதாரமானதாக இல்லை வசூலிக்கப்படும் சினிமா கட்டணம் குறித்து முறையான கணக்குகள் இல்லை ஒரு டிக்கெட் 150ரூபாய் வசூல் செய்வதும் கட்டணத்தை டிக்கெட்டில் பதிவு செய்யப்படவில்லை மேலும் சினிமா தியேட்டர் அவணங்களையும் ஆய்வு செய்தார். தியோட்டர் சுற்றுபுரங்களில் டெங்கு கொசு புழுக்கல் உருவாகும் சூழ்நிலை ஆகியவற்றை கண்டறிந்தார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போவதாக தியேட்டர் மேலாளரிடம் தெரிவித்தார். மேலும் பேனர் வைக்க கட்டுபாடுகளை விதித்தார். பேனர் சரிந்து மின்சாரம் தாக்கி காயம் அடைந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார். டெங்கு காய்ச்சல் உருவாக்கும் கொசு புழுக்கல் உருவாகினால் தியேட்டாருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார். இந்த ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர் மதியழகன் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து