ஆளுக்கு ஒரு மரம், ஆண்டுக்கு ஒரு மரம் எனும் புதுமை திட்டம் அகலார் குருகுலம் பள்ளியில் அறிமுகம்

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      நீலகிரி
29ooty-1

ஆளுக்கு எஒரு மரம், ஆண்டுக்கு எஒரு மரம் எனும் புதுமையான திட்டம் ஊட்டியருகேயுள்ள அகலாரில் அமைந்துள்ள குருகுலம் பள்ளியில் துவங்கப்பட்டது.                                   

நீர்வளத்தை காக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும் துவக்கப்பட்ட இவ்விழாவிற்கு பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்று பேசினார். பள்ளியின் தாளாளர் என்.அர்ஜூணன் திட்டத்தை அறிமுகப்படுத்திவைத்து கூறியதாவது_

ஆண்டுக்கு 130 கோடி மரங்கள்

ஆளுக்கு ஒரு மரம், ஆண்டுக்கு ஒரு மரம் என்ற திட்டத்தின் கீழ் பள்ளியிலுள்ள ஒவ்வொரு மாணவர்களுக்கும், ஒரு மரக்கன்று என்ற விதத்தில் 400 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் ஒவ்வொரு மாணவரும் ஆண்டுக்கு எஒரு மரமாவது நட்டு அதனை பாதூகாத்து பராமரிக்க வேண்டும். மரக்கன்று நடுவதை காட்டிலும் அதனை பாதுகாத்து பராமரித்தல் மிக, மிக அவசியம் என்பதை அறிவுறுத்தும் வகையில் இத்திடடம் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு மாணவன் ஒரு ஆண்டிற்கு ஒரு மரம் நட்டு வந்தால் தனது வாழ்நாளில் குறைந்த பட்சம் 60 முதல் 90 மரங்கள் நடப்படுகிறது. நமது நாட்டின் ஜனத்தொகை 130  கோடி. நாம் எஒவ்வொருவரும் ஆண்டிற்கு ஒரு மரம் நடுவதால் 130 கோடி மரங்கள் நடப்படும். இதேபோன்று உலகிலுள்ள அனைவராலும் இது கடைபிடிக்கப்பட்டால் உலக ஜனத்தொகைக்கு ஏற்றவாறு ஆண்டிற்கு 600 கோடிமரங்களின் எண்ணிக்கை பெருகும். இதன் மூலம் சுமார் 10 ஆண்டுகளில் ஒரு அற்புதமான சுற்றுச்சூழல் உருவாகும் நிலை ஏற்படும் என்றார்.

பராமரிக்க உறுதிமொழி

 விழாவில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு மரங்கன்றுகளோடு ஆளுக்கு ஒரு மரம், ஆண்டுக்கு ஒரு மரம் என்ற வாசகம் கொண்ட துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த வாசகங்களை கிராமப்பகுதியில் ஒட்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.  அதனைத்தொடர்ந்து அனைத்து மாணவர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை நட்டு அதனை பாதுகாத்து பராமரிப்போம். இத்திட்டத்தை கடைபிடிக்க அனைவரையும் வலியுறுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் மகேஷ் நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து