மாவட்டத்தில் விபத்து சதவீதம் அதிகரிப்பு வாகன சோதனையை தீவிரமாக்க முடிவு எஸ்.பி

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      ஈரோடு

-சாலை விபத்துகள் நடக்கும், மாலை நேரங்களில், வாகன தணிக்கையை தீவிரப்படுத்த இருப்பதாக, ஈரோடு எஸ்.பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எஸ்.பி சிவக்குமார் கூறியதாவது ஏ.டி.ஜி.பி கரன் சின்ஹா தலைமையில், சென்னையில் சாலை விபத்துகளை குறைப்பது தொடர்பான கூட்டம்,  நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 2016ஐ விட இந்தாண்டு சாலை விபத்து மரணங்கள், 20 அதிகரித்துள்ளன. ஆனால் விபத்துகள், 150 குறைந்துள்ளன. விபத்துகளை குறைக்க, பெருந்துறை-சித்தோடு இடையே, ஐந்து மேம்பாலங்கள் கட்ட வேண்டும்.

குறிப்பாக நசியனூரில் இரண்டு, காஞ்சிகோவில், பெத்தாம்பாளையம், துடுப்பதி பிரிவுகளில் தலா ஒரு மேம்பாலம் கட்ட, அறிவுறுத்தி வருகிறோம். இந்தாண்டு, 36 பேர், இப்பகுதியில் மட்டும் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். மூன்று மேம்பாலங்களை கட்டி கொடுக்க இசைவு தெரிவித்துள்ளனர். திம்பம் மலைப்பாதையில், மேலே இருந்து வரும் வாகனங்கள், கீழிருந்து செல்லும் வாகனங்களுக்கு தெரியாததால், விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க, கீழ் இருந்து செல்லும் வாகனங்கள், மேலே இருந்து கீழே வரும் வாகனங்களை அறிந்து கொள்ளும் வகையில், ஏற்கனவே விபத்து ஏற்பட்ட இடங்களில், லென்ஸ் வைக்க யோசனை செய்து வருகிறோம். தமிழகத்தில், இரவு, 700 மணி முதல் இரவு, 900 மணி வரைதான் அதிகளவில் விபத்து நடப்பதாக சர்வேயில் தெரியவந்துள்ளது. 

டி.எஸ்.பிகளுக்கு மெமோ

எனவே இந்த நேரத்தில், வாகன தணிக்கை அதிகளவில் மேற்கொள்ளப்படும். சாலை விபத்தில் மூன்று பேருக்கு மேல் இறந்த, 71 இடங்கள் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இதற்காக டி.எஸ்.பிகளுக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. தினமும் மாலை, 430 மணிக்கு மேல், ஒவ்வொரு டி.எஸ்.பியும் விபத்து நடப்பதாக கணிக்கப்பட்ட இடங்களில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனரா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பேரிகார்டு வைக்க கூடாது என்ற உத்தரவு வந்துள்ளது. சாலை விபத்துகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை கடந்தாண்டை விட இந்தாண்டு ஈரோடு மாவட்டத்தில், 4 சதவீதம், சேலம் மாவட்டத்தில், 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாநகரில், 40 கி.மீ வேகத்துக்கு மேலும், புறநகரில், 80 கி.மீ வேகத்துக்கு மேலும் செல்லக்கூடாது என்பது, விரைவில் அரசிதழில் வெளியிடப்படும். அதன் பின் விழிப்புணர்வு தகவல் பலகை வைக்கப்படும். இதன் பிறகு, குறிப்பிட்ட நாட்களுக்கு பின், வாகன வேகம் தீவிரமாக கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து