முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்டெக்ஸ் தொட்டிகளில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்: ஆணையாளர் அனீஷ் சேகர் வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- மதுரை மாநகராட்சி பொன்னகரம் மற்றும் ஆண்டாள்புரம் பகுதியில் டெங்கு தடுப்பு பணியினை ஆணையாளர்                   மரு.அனீஷ் சேகர்.   ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 வார்டு எண்.11 பொன்னகரம் பிராட்வே பகுதியில் நடைபெற்ற டெங்கு தடுப்பு பணியினை ஆய்வு செய்து வார்டு அலுவலகத்தில் மேல்மாடியில் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டியில் தேங்கியுள்ள மழைநீரினை அகற்றுமாறும், கவிழத்தி வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டிகளில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுமாறும் கூறினார். பிராட்வே பகுதியில் வீடுகளில் ஆய்வு செய்த போது காம்பவுண்ட் வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிப்பறையின் தண்ணீர் தொட்டிகளில் பெரும்பாலான வீடுகளில் டெங்கு கொசு புழு உற்பத்தி கண்டறியப்படுவதால் ஒவ்வொரு வீட்டில் இருப்பவரும் வாரம் ஒருமுறை தொட்டியினை சுத்தம் செய்து பராமரிக்குமாறு கூறினார். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சிமெண்ட் உள்ளிட்ட தண்ணீர் தொட்டிகளில் நீரினை அப்புறப்படுத்த பிளிச்சிங் பவுடர் தெளித்து சுத்தப்படுத்தும் பணியினை பார்வையிட்டார். அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரினை ஆய்வு செய்து தினந்தோறும் மாற்றுமாறு கூறினார். கட்டிடத்தின் கீழ்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கான்கீரிட் கலவை இயந்திரத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதை பார்வையிட்டு உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். பொன்னகரம் வார்டில்  நடைபெற்று வரும் தீவிர துப்புரவு பணியினை ஆய்வு செய்து அனைத்து காலிமனைகளில் தேங்கியுள்ள குப்பைகளை முழுமையாக அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மண்டலம் எண்.4 வார்டு எண்.77 ஆண்டாள்புரம் பகுதியில் நடைபெற்று வரும் தீவிர துப்புரவு பணியினை ஆய்வு செய்தார். மேலும் ஆண்டாள் புரம் டி.வி.காலனி, எச்.எம்.எஸ்.காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த டெங்கு ஒழிப்பு பணியினையும் ஆய்வு செய்து எச்.எம்.எஸ். காலனியில் பொதுமக்கள் வீடுகளில் நீல நிற டிரம்களில் பிடித்து வைத்துள்ள குடிநீரில் டெங்கு கொசு உற்பத்தி குறித்து ஆய்வு செய்து பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தமாக கழுவி மூடி வைக்குமாறு கூறினார். அங்குள்ள ஒரு வீட்டில் பூந்தொட்டியில் தேங்கியிருந்த தண்ணீர்pல் டெங்கு கொசு புழு இருப்பதை கண்டறிந்து அங்குள்ள பொது மக்களிடம் காண்பித்து சிறிய அளவில் கூட தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுமாறு கூறினார். அங்குள்ள காலியிடத்தில் சுகாதாரமற்ற முறையில் குப்பைகள் தேங்கியிருந்ததால் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தி காலியிடத்தின் உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் விதிக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் ஒவ்வொரு மண்டலத்திலும் 4 வார்டுகள் தேர்வு செய்து தினந்தோறும் தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளுமாறு ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில் மண்டலம் எண்.1 வார்டு எண்.4, 6, 11, 17 ஆகிய வார்டுகளிலும், மண்டலம் எண்.2 வார்டு எண்.24, 30, 39, 46 ஆகிய வார்டுகளிலும், மண்டலம் எண்.3 வார்டு எண்.54, 56, 60, 61 ஆகிய வார்டுகளிலும், மண்டலம் எண்.4 வார்டு எண்.77, 81, 97, 98 ஆகிய வார்டுகளிலும் தீவிர துப்புரவு பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது நகரப்பொறியாளர் மதுரம், உதவி ஆணையாளர் அரசு, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், விஜயகுமார், உதவிப் பொறியாளர் தி.மல்லிகா, சுகாதார ஆய்வாளர்கள் சேகர், செல்வகுமார்,  உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து