முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு, சிறு வயது முதலே சேமிக்கும் பண்பினை ஊட்டி வளர்த்திட வேண்டும் கலெக்டர் சிவஞானம் அறிவுரை

திங்கட்கிழமை, 30 அக்டோபர் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்-விருதுநகர் மாவட்டம் சிறுசேமிப்புத் துறையின் மூலம் உலக சிக்கன நாள் விழா 2017 - முன்னிட்டு சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் இடையே நடைபெற்ற கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, நடனப்போட்டி மற்றும் நாடகப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்.  பாரட்டுச்சான்றிதழ்களையும், நினைவுப்பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
“சிக்கனமும், சேமிப்புமும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30ம் நாள் உலக சிக்கன நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ‘இன்றைய சேமிப்பு நாளைய வாழ்வின் பாதுகாப்பு” என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட ஒவ்வொரு குடிமக்களும் சேமிப்பு பழக்கத்தினை அவசியம் கடைபிடிக்கப்பட வேண்டும்.  அவ்வாறு சிறுக சிறுக சேமித்த தொகை பெருந்தொகையாகி அவசர காலங்களில் ஏற்படும் எதிர்பாரா செலவினங்களை மேற்கொள்ள உதவும்.  மக்கள் தங்கள் கடின உழைப்பால்  ஈட்டிய செல்வத்தை தங்களது குடும்பத்திற்கு பயன்படும் வகையில் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால், அந்த தொகைக்கு உத்தரவாதமும், எதிர்கால வாழக்கைக்கு பாதுகாப்பும் கிடைத்திடும். மேலும், பெற்றோர்கள் தாங்களும் சேமித்து, தங்களது பிள்ளைகளுக்கும் சிறு வயது முதலே சேமிக்கும் பண்பினை ஊட்டி வளர்த்திட வேண்டும்.
சிறுவயதிலேயே சேமிப்பு பழக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும், பெற்றோர்கள்  மற்றும் சக மாணவ, மாணவியர்களிடத்தில்; சேமிப்பு பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மாணவர்கள் மத்தியில் சிக்கனத்தின் அவசியம் குறித்தும் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்கள் இடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, நடனப் போட்டி மற்றும் நாடகப் போட்டிகள்; நடத்தப்படுகின்றன. மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக பாராட்டுச்சான்றிதழ்களும், நினைவுப்பரிசுளும் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் இளமைப்பருவத்திலிருந்தே சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அஞ்சலக சேமிப்பு மூலம் நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மை பயக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
 இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு)  லீலா,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஒருங்கிணைப்பாளர்  ராஜா, அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து