முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திங்கட்கிழமை, 30 அக்டோபர் 2017      தேனி
Image Unavailable

தேனி.-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து 164 பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  ச.ஞானசேகரன்   மாவட்ட வழங்கல் அலுவலர்  தி.ரசிகலா   மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்  தி.கிருஷ்ணவேனி   மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  தி.ஜெயசீலி அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து