முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுப்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள்: கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 31 அக்டோபர் 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை பல்வேறு தெருக்களில் வீடு, வீடாகச் நேரில் சென்று மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி

மாவட்ட கலெக்டர், புதுப்பாளையம் பேரூராட்சி, அரசமரத் தெரு, காமாட்சி அம்மன் தெரு, மேல் தெரு, சந்தைப் புதுப்பாளையம், மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகச் நேரில் சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பேரூராட்சி மூலம் வீடுகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் வழங்கப்பட்டு வரும் தண்ணீரில் கோளாரின் அளவு குறித்து சோதனை மேற்கொண்டார். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் டெங்கு கொசுப்புழு எவ்வாறு உற்பத்தி ஆகிறது, அந்த கொசுப்புழுக்கள் வளராமல் பார்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து மாவட்ட கலெக்டர் விரிவாக எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் புதுப்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் மண்டல அலுவலர், செயல் அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோருடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.மேலும், புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு நேரில் சென்று மாவட்ட கலெக்டர் அவர்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது புதுப்பாளையம் பேரூராட்சி செயலர் சுகந்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து