12 பெட்டியுடன் மின்ரயில் இயக்க வேண்டும் ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 31 அக்டோபர் 2017      வேலூர்
Dt  01  AKM  OTO

 

12பெட்டிகளுடன் கூடிய மின்சார ரயில் சேவை வேண்டும் என அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க செயற் குழுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள்; அறிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோரிக்கை

இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில் தனியார் மண்டபம் ஒன்றில் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க செயற் குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள்; அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க பொதுசெயலாளர் ரகுநாதன் மற்றும் ஜிடிஎன்.அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு தலைவர் நைனா மாசிலமணி தலைமை தாங்கினார்.பொருளாளர் சிவக்குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் ஆர்.வெங்கட்டரமணன், க.கௌதம், எஸ்வந்த்ராவ், நாம்.வெங்கடேசன், வக்கில் தேவராஜ், கேஆர்.சந்திரன், சரஸ்வதி, நவநீதம்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் முனிபிரசாத் நன்றி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.

அரக்கோணம் சென்னைக்கு இடையே பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் 9பெட்டி கொண்ட மின்தொடர் வண்டி போதவில்லை எனவே, 12எண்ணிக்கைகள் கொண்ட மின்சார தொடர் (வண்டி) பெட்டிகள் இயக்க உடனடியாக ரயில்வே நிர்வாகம் முன்வரவேண்டும். அரக்கோணம் தக்கோலம் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கபடும் மின்மயமாக்கும் பணிகள் நிறைவேறாத நிலையில் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும்; டிஇஎம்யு ரயில் இயக்கவேண்டும்.

ஜூலையில் வெளியிடபடும் ரயில்பயண கால அட்டவனை ஆகஸ்டில் வெளியிடபடும் என அறிவிக்கப்பட்டு அக்டோபர் கடந்து நவம்பர் மாதமும் வந்துவிட்டது. எனவே, பயணிகளின் முக்கிய பயன்பாட்டிற்கு உரிய கால அட்டவனையை உடனடியாக வெளியிட வேண்டும் சென்னை பெங்களுருக்கு கூடுதலாக அதிவேக ரயில்வண்டி விடப்படும் என முந்தைய பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கபட்டும் இதுவரை நிறைவேற்றபடாமல் இருப்பதால் அறிவித்தபடி உடனடியாக ரயில் விடவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்; இவ்வாறு அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க செயற் குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள்; அறிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Jallikattu 2019 | Alanganallur

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து