முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் மத்தியில் ஒருமைப்பாட்டு உணர்வு வளரவேண்டும்: கலெக்டர் கே.விவேகானந்தன் அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 31 அக்டோபர் 2017      தர்மபுரி

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை சுவாமி விவேகானந்தா செவிலியர் கல்லூரியில் மத்திய அரசின் களவிளம்பரத் துறை சார்பில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுத் தின சிறப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் கவிதைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கி தலைமையுரையாற்றினார்.

அறிவுறுத்தல்

 

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி முகாமில் கலெக்டர் கே.விவேகானந்தன், பேசியதாவது:- தேசிய ஒருமைப்பாட்டுத் தின சிறப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தின விழா மாணவர்கள் மத்தியில் ஒருமைப்பாட்டு உணர்வு வளரவேண்டும் என்பதை வலியுறுத்தி நடத்தப்படுகிறுது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் தொடர்ந்து ஒருமைப்பாட்டு உணர்வை வளர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 100-க்கு 24.5 சதவிகிதம் மாணவர்கள் தான் சேருகிறார்கள். தமிழ்நாட்டில் 100-க்கு 44.30 சதவிகிதம் பேர் உயர்கல்வி பயிலும் நிலையை பெற்றுள்ளார்கள்;. தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் 20 ஆயிரத்து 106 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதில் 19 ஆயிரத்து 400 மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே தருமபுரி மாவட்டத்தில் தான் 96.82 சதவிகிதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொழில் வளர்ச்சிலும் இனி வளர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக இத்திட்டத்தின் மூலம் சுமார் 12 ஆயிரம் விவசாயிகள் சேர்ந்து 28 இலட்சம் ரூபாய் பயிர் காப்பீட்டுத் தொகை செலுத்தினர். அவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் சுமார் 4 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்டஆட்சித்தலைவர் கே.விவேகானந்தன், பேசினார்.

முன்னதாக அதியமான்கோட்டையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர் அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் பார்த்தசாரதி மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து