எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா :சிவகங்கையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார்

1 sivagangai news

சிவகங்கை.-சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட சிவன்கோவில் எதிரில் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவரது புகழை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.லதா, தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் முன்னிலையில்,   கதர் மற்றும் கிராமத் தொழில்கள்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் நேற்று துவக்கி வைத்தார்.
              இந்த சிறப்புப் புகைப்படக் கண்காட்சியில் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராகப் பதவியேற்ற புகைப்படம், அவரது தலைமையிலான அமைச்சரவைப் புகைப்படம், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், புரட்சித் தலைவி அம்மா ஆகியோருடன் உள்ள புகைப்படங்கள், முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி மற்றும் இராஜீவ்காந்தி, ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோருடன் இருக்கும் புகைப்படம், மாற்றித்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், குழந்தைகளிடம் அன்புடன் உள்ள புகைப்படங்கள், போப் ஆண்டவரை வரவேற்கும் புகைப்படம், குழந்தைகளுடன் சத்துணவு சாப்பிடும் புகைப்படம், காவல்துறை அலுவலர்கள், சாரணப்படை மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்குதல், ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் புகைப்படம், அரசு கோப்புகளை பார்வையிடும் புகைப்படம், தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்யும் புகைப்படம், டாக்டர் பட்டம் பெறும் புகைப்படம், தெலுங்கு கங்கை குடிநீர்த் திட்டம் பூமி பூஜை புகைப்படம், தியாகசீலர் கக்கனிடம் நலம் விசாரிக்கும் புகைப்படம், நரிக்குறவர்களுடன் உணவு அருந்தும் புகைப்படம், ஏழை பெண்களுக்கு இலவச சேலை வழங்கும் புகைப்படம், பொது விருந்தில் உணவருந்தும் புகைப்படம், அன்னதானம் வழங்கும் புகைப்படம் போன்ற பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் சிறப்பினை விளக்கும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
          இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வட்டாட்சியர் கந்தசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து