வேலூரில் 34075 மாணவ மாணவிகளுக்கு ரூ.42.25 கோடி மதிப்பிலான 34,075 விலையில்லா மடிக்கணினிகள்: அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர் கபீல் வழங்கினர்

புதன்கிழமை, 1 நவம்பர் 2017      வேலூர்
1

வேலூர் ஊரிஸ் கல்லூரி காபு அரங்கில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2016-2017 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த 34,075 மாணவ மாணவியர்களுக்கு ரூ.42.25 கோடி மதிப்பிலான 34,075 விலையில்லா மடிக்கணினிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வழங்கினார்கள்.இவ்விழாவில் கலெக்டர் சி.அ.ராமன், தலைமை வகித்தார்.

அமைச்சர்கள் பேச்சு

இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

மறைந்தும் மறையாமல் தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்காமல் குடிகொண்டிருக்கும் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நல்;லாசியுடன் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிகள் வழங்கும் விழாவின் தொடக்கமாக இம்மாவட்டத்தில் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது. வசதியுடையோர் மடிக்கணினிகளை பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்குவதைப் போல ஏழை எளிய மக்களின் பிள்ளைகளும் வசதி படைத்தவர்கள் பயன்படுத்தும் மடிக்கணினியை பெற்று அப்பிள்ளைகளும் மடிக்கணினிகளை பயன்படுத்தி கல்விக்கு தேவையான பல நல்ல செய்திகளை அறிந்து கொண்டு கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் மறைந்த தமிழக முதல்வர் அம்மா 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதி அளித்தார்கள். மறைந்த தமிழக முதல்வர் அம்மா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து இத்திட்டத்தை 7 ஆண்டுகளாக தமிழகத்தில் மாணவ மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்திட்டத்தினை போல இதுவரையில்; செயல்படுது;தப்படவில்லை. அப்படிப்பட்ட திட்டத்தை தமிழக பள்ளி மாணவ மாணவிகளுக்கு வெற்றிகரமாக வழங்கி வித்திட்டவர் மறைந்த தமிழக முதல்வர் அம்மா . தமிழக அரசிற்கு கிடைக்கும்; மொத்த வருவாய் பட்ஜெட்டில் சுமார் 15 சதவிகிதம் முதல் 20 வதவிகிதம் வரை பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு அனைத்து கல்வி உபகரணங்களையும் விலையில்லாமல் வழங்கி வருகிறது.

தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவ மாணவிகளுகு;கு இலவச மிதிவண்டிகள், 14 வகை உபகரணம், உயர்கல்வி பயில 5000 வைப்புநிதி போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கணினித்துறையில் வருங்கால சந்ததிகள் போட்டி போட்டு வெற்றி பெற வழங்கப்படும் இக்கணினிகளை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு பல புதிய யுக்;திகளை உருவாக்கி சாதனைகளை செய்து வெற்றியாளர்களாக திகழ வேண்டும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

அமைச்சர் நிலோபர் கபீல்

 

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது:- மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று சிறப்பாக நடைபெறுகிறது. தமிழக அரசு பள்ளி மாணவ மாணவர்களுக்கு அனைத்து விதமான உபகரணங்களையும் இலவசமாக வழங்கி வருகிறது. மாணவர்கள் விடாமுயற்சியுடன் தங்களுடைய கல்வியை கற்க வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் வெற்றிப்பெற்று சாதிக்க முடியும். படித்து முடித்துவிட்ட பின்னர் வேலையை நாடி செல்லும் இளைஞர்கள் வேலை கிடைக்கவில்லை என்று சோர்ந்து விடுகிறார்கள். அவர்களுக்காகவே தமிழக அரசு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் என்ற கழகத்தின் மூலம் இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

8, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவர்கள் இக்கழகத்தில இணைந்து பயிற்சி பெற்று வேலைவாய்ப்பிற்கு தேவையான அனைத்து தகுதிகளை கற்றுக்கொண்டு தனியார்; நிறுவனங்களுக்கு சென்றால் நிச்சயமாக வேலை கிடைக்கும். மேலும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் இலவசமாக அரசு தேர்வுகளை எழுத தேவையான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இவற்றை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களையும் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வு மாணவ மாணவியர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட வேண்டும். இதுபோன்று தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினி பெற்று தங்களுடைய எதிர்கால வாழ்க்கையை திறம்பட அமைத்துக்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், ஆவின் nருந்தலைவர் த.வேலழகன், வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவர் டபுள்யு.ஜி.மோகன், மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, மாவட்ட கல்வி அலுவலரின் உதவியாளர் ராஜன், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து