கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஒன்றியப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள்: அமைச்சர் ஒ.எஸ்.மணியன்,, கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், ஆய்வு

புதன்கிழமை, 1 நவம்பர் 2017      நாகப்பட்டினம்
2

நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் மற்றம் சீர்காழி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து கைத்தறி மற்றம் துணிநூல்துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன், கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் ஆய்வு

பழையார் சுனாமி நகரில் மழைநீர் தேங்கியுள்ள பகுதியினைப் பார்வையிட்டு கைத்தறி மற்றம் துணிநூல்துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் தெரிவித்ததாவது, " தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இத்தகைய மழைநீரை சேமித்து, விவசாயத்திற்கு பயன்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்தும் வகையிலும் தமிழக அரசின் அரசாணையின்படி மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன.

இருந்த போதிலும் பொதுமக்கள் மழை வெள்ளம் பாதிக்கும் இடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். மழைநிர் தேங்கி தங்கள் பகுதியில் பாதிப்புக்குள்ளாகும் போது. உடனடியாக அரசு அலுவலர்களை தொடர்பு கொண்ட தெரிவிக்க வேண்டும். மழைக்காலங்களில் அனைவரும் தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும். பொதுமக்களுக்கு எந்த வித இடர்பாடும் ஏற்படாவண்ணம் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது." என தெரிவித்தார்.

கொள்ளிடம் ஒன்றியம், உமையாள்பதி மற்றும் பச்சைப்பெருமாநல்லூர் ஆகிய கிராமங்களில் விளைநிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை பார்வையிட்ட கலெக்டர் வடிகால்களை ஆழப்படுத்தி தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.மாதானம் ஊராட்சியில் வனத்துறை சார்பில் தேக்கு மரங்கள் நடப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அவர்கள மழைநீர் தேங்காமல் கரைகள் சரிசெய்யுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இம்மாவட்டத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களும,; பல்நோக்கு பாதுகாப்பு மையம் ஆகியவற்றை பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் வைக்கவும், மேலும், பள்ளி கட்டிடங்கள், கல்லூரிகள், சமுதாய கூடங்கள், பொது கட்டிடங்களில் பாதிக்கக்கூடிய மக்களை தங்க வைக்க ஏதுவாக தயார் நிலையில் வைக்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி, மயிலாடுதுறை சார் கலெக்டர் செல்வி.பா.பிரியங்கா,, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கருணாகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சங்கர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன,; செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் வட்டாட்சியர் திரு பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து