முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேதாஜி - தேவர் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் ஜனநாயக பார்வர்டு பிளாக் கோரிக்கை

புதன்கிழமை, 1 நவம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை,-          நேதாஜி - தேவர் பிறந்த நாளை தேசியவிடுமுறையாக அறிவிக்க வேண்டுமென்று ஜனநாயக பார்வர்டு பிளாக் கட்சி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
    ஜனநாயக பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் 110 - ஜெயந்திவிழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர்சிலைக்கு ஜனநாயக பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான எஸ்.வேலுச்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக பசும்பொன்னில் உள்ள தேவர்நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
     மதுரை அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் அருகே ஜனநாயக பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தேவர் ஜெயந்தி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.ராதா சுரேஷ் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ஆர்.காசிநாதன் வரவேற்றார். மூத்த வழக்கறிஞர் டி.கே.கோபாலன், ஜனதா தளபொதுச்செயலாளர் க.ஜான்மோசஸ், இந்திய தேசிய லீக் தலைவர் எம்.நாகூர்ராஜா, தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி வழக்கறிஞர் ஆர்.பாண்டி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
          இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23 ம் தேதியையும், பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் பிறந்தநாளான அக்டோபர் 30 ம் தேதியையும் தேசிய விடுமுறை தினமான மத்திய அரசு அறிவிக்க வேண்டும். பசும்பொன் கிராமத்தை விரிவுபடுத்தி ஆன்மீக சுற்றுலா தளமாக அரசு அறிவிக்க வேண்டும்.
மதுரை கோரிப்பாளையத்தில் தேவர்சிலை அருகே அரசு சார்பில் நடைபெற்று வந்த தேவர் ஜெயந்திவிழாவை தொடர்ந்து நடத்தவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜனநாயக பார்வர்டு பிளாக் கட்சி வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து