முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அதிகாரிகளுடன் ஆய்வு

புதன்கிழமை, 1 நவம்பர் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.-மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் நகராட்சி நிர்வாக ஆணையாளர்  ஜி.பிரகாஷ்,   தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,   மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ் சேகர். ஆகியோர் முன்னிலையில்   கூட்டுறவுத் துறை அமைச்சர்  செல்லூர் கே. ராஜூ  டெங்கு தடுப்பு பணிகள் குறித்து  நேற்று ஆய்வு மேற்கொண்டு பேசும்போது தெரிவித்ததாவது:
  தமிழ்நாடு முதலமைச்சரின்   உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் சுற்றி இருக்கின்ற ஏறத்தாழ 45,000 ஏக்கர் முதல் சாகுபடி பருவத்தில் பயன் அடைகின்ற வகையில் ஒரு நாளைக்கு 900 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டு வந்து இருக்கிறோம். கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக மிகப்பெரிய குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் தட்டுபாடே இல்லாத அளவிற்கு மாநகராட்சியின் சார்பில் சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டதற்கு நகராட்சி நிர்வாக ஆணையாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்குவை கட்டுப்படுத்துவதற்காக நான்கு மண்டலங்களிலும் ஒரு நாளைக்கு ஒரு வார்டு வீதம் நான்கு வார்டுகள் தேர்வு செய்யப்பட்டு தீவிர துப்புரவுப்பணி மேற்கொள்ளப்பட்டு அறவே டெங்கு கொசு புழு உற்பத்தி இல்லாத அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. தீவிர துப்புரவுப்பணிக்காக 400 பணியாளர்களும் மேலும் கொசுஒழிப்பு பணிகளுக்காக 1100 பணியாளர்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். புகை பரப்பும் வண்டி 8,                  5 லிட்டர் புகை பரப்பும் இயந்திரங்கள் 33, 2 லிட்டர் கை புகை பரப்பும்  இயந்திரங்கள் 52, கை தெளிப்பான் 28 என டெங்கு கொசுவை ஒழிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. புகை பரப்பும் இயந்திரத்திற்கு 1600 லிட்டர் கொசு மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது மேலும் இப்பணியில்             40 மருத்துவர்களும், 117 செவிலியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார்     3 லட்சம் நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது. 29 வகையான காய்ச்சல் இருக்கிறது என்றும் காய்ச்சல் வந்தவுடன் அது டெங்கு காய்ச்சல் என்று பயப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் டெங்கு காய்ச்சல் அறவே கட்டுப்படுத்தப்படும். எனவே   அம்மாவின் அரசு தமிழக மக்களுக்கு சிறப்பான பணிகளை வழங்கி வருகிறது. டெங்கு தடுப்பு பணிக்கு செல்லும்பொழுது டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு முதலில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, அடுத்த 2 அல்லது 3 நாட்கள் கழித்து மறுபடியும் அதே ஆய்வு மேற்கொள்ளும் போது தவறு இருந்தால் அபராதம் விதிக்கலாம். அபராதம் விதிப்பது அரசின் நோக்கமல்ல. ஒரு வீட்டினாலோ அல்லது நிறுவனத்தினாலோ சுற்றியுள்ளவர்களுக்கும், அடுத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவே அபராதம் விதிக்கப் படுகிறது. பொதுமக்கள் தங்கள் புகார்களை மக்கள் பிரதிநிதிகளிடம்தான்  கூறுவார்கள் எனவே அலுவலர்கள் அதனை கவனத்தில் கொண்டு அரசிற்கு நல்ல பெயர் ஏற்படுத்த வேண்டும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் மழைகாலங்களில் பாதாள சாக்கடை மேனுவெல்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படும் அவற்றை உடனடியாக சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 5 வார்டுகளுக்கு ஒரு சம்பு அமைத்தோ மோட்டார்களின் எண்ணிக்கையை அதிகரித்தோ கழிவுநீரினை அகற்ற வேண்டும். கால்வாய்களில் பொதுமக்கள் குப்பைகள் போடுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும். எனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கழிவுநீரினை அகற்றுவதற்காக நவீன கழிவுநீர் உறிஞ்சு வாகனம் வாங்குவதற்கு ரூ.54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மண்டலத்திற்கு ஒன்று வீதம் விரைவில் கொள்முதல் செய்து மதுரை மாநகராட்சிக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மக்கள் நமது செயல்பாட்டையும் பணிகளையும் பார்த்து பாராட்டுகிறார்கள். எனவே மக்கள் பணியை நாம் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்  என்றார்.
நகராட்சி நிர்வாக ஆணையாளர்  ஜி.பிரகாஷ்,  பேசும்போது தெரிவித்ததாவது :
மதுரை மாநகராட்சியில் வறட்சிக்காலத்தில் மிகப்பெரிய குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது சிறப்பாக திட்டமிட்டு வெற்றிகரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 3,40,000 வீடுகளை 300 வீடுகளாக பகுதி பகுதியாக பிரித்து 300 முதல் 350 வீடுகளுக்கு ஒரு டிபிசி பணியாளர்கள் குழு அமைக்கப்பட்டு ஒரு நாளைக்கு 50 வீடுகள் வீதம் ஆய்வு மேற்கொண்டு 6 நாட்கள் கழித்து 7 வது நாள் மறுபடியும் அதே 50 வீடுகளில் ஆய்வு மேற்கொள்வார்கள். இந்த நடைமுறை வருடம் முழுவதும் மேற்கொள்வதால் வீடுகளில் தேவையில்லாமல் தேக்கி வைத்துள்ள தண்ணீர் அகற்றப்படுவதுடன் தேவையற்ற பொருட்களும், கொசு புழு உற்பத்தியாகும் காரணிகளும் கண்டறியப்பட்டு அழிக்கப்படும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் இன்று காலை ஆய்வு மேற்கொண்ட போது டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது தெரிய வருகிறது. இப்பணியில் களப்பணியாளர்களும் மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு நாளைக்கு ஒரு வார்டு வீதம் 4 வார்டுகள் தேர்வு செய்;யப்பட்டு ஒவ்வொரு வார்டுக்கும் 50 முதல் 60 பணியாளர்களை கொண்டு அனைத்து வீடுகள், காலியிடங்கள் என தீவிர துப்புரவுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு மாதத்தில் அனைத்து வார்டுகளும் என சுழற்சி முறையில் தீவிர துப்புரவுப்பணி மேற்கொள்ளுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என  அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மதுரையில் உள்ள 744 பள்ளிகளுக்கும் 2 தவணையாக வருடத்திற்கு 6 முறை நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியின் சார்பிலும், பொது சுகாதாரத்துறையின் சார்பிலும் டெங்கு தடுப்பு சிறப்பு முகாம்கள்; தொடர்ந்து நடத்தப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து பணிமனைகள், பெரிய கட்டிடங்கள் என வார்டு வாரியாக கணக்கெடுக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் தேங்குவது முற்றிலுமாக தடுக்கப்பட்டு வருகிறது. இந்த டெங்கு தடுப்பு பணி தொடர்ந்து மேற்கொள்வதால் டெங்கு கொசு புழு உற்பத்தி உருவாகுவது தடுக்கப்படும். 300 வீடுகளை பணியாளர்கள் முறையாக பார்க்கிறார்களா என கண்காணிக்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முறையாக பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. டெங்கு தடுப்பு பணியை பொறுத்தமட்டில் டெங்கு அனைத்து காலங்களிலும் வருவதால் அதிக பொருட் செலவு ஆனாலும் மக்களுடைய பாதுகாப்பு நலன் கருதி இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும் இதே முறை பின்பற்றப்படும். இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பிறகும் புழு உற்பத்தி கண்டறியப்பட்டால்தான் அபராதம் விதிக்கப்படுகிறது. மதுரை மாநகராட்சியை பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் கேஸ் குளோரின், லிக்யூட் குளோரின் மூலம் குடிநீரில் சரியான அளவு குளோரின் கலக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீரில் குளோரின் அளவு சரியாக கலக்கப்பட்டு இருந்தால் டெங்கு கொசு புழு உற்பத்தி குறைவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும் இதே முறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.  
முன்னதாக நகராட்சி நிர்வாக ஆணையாளர் அவர்கள் மண்டலம் எண்.2 வார்டு எண்.44 கே.கே. நகர், மண்டலம் எண்.1 வார்டு எண்.23 விளாங்குடி  ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த டெங்கு தடுப்பு பணிகளிலும், தீவிர துப்புரவு பணியினையும் ஆய்வு மேற்கொண்டார். விளாங்குடி கணபதி நகர் 1 வது தெருவில் காலியிடத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் ஆயில்பால் தெளிக்குமாறு உத்தரவிட்டார். அங்கு பணியாற்றிய டிபிசி பணியாளர்களிடம் டெங்கு பணி குறித்த விபர அறிக்கையினை பார்வையிட்டார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் நகராட்சி நிர்வாக ஆணையாளர், சென்னை  ஜி.பிரகாஷ்,   மாவட்ட ஆட்சித் தலைவர்  கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,   பாராளுமன்ற உறுப்பினர்  கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள்  வி.வி.ராஜன் செல்லப்பா,  சரவணன், துணை ஆணையாளர்  ப.மணிவண்ணன், நகரப்பொறியாளர்  மதுரம், உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள்,  மாநகராட்சி அலுவலர்கள், மண்டல நிர்வாக ஆணையர்கள், 5 மாவட்ட நகராட்சி ஆணையர்கள், பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து