ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் கல்லூரி மாணவிகள், பொதுமக்களிடம் டெங்கு ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரம்

வியாழக்கிழமை, 2 நவம்பர் 2017      நீலகிரி
2ooty-1

ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரி
மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி நீலகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் பரவாமல் தடுப்பதற்கு தண்ணீர் தொட்டிகளில் உள்ள தண்ணீரை மூடி வைத்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் போன்றவற்றை நாள்தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரி மாணவிகளிடம் டெங்கு குறித்த விழிப்புணர்வை வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கல்லூரி மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி கூறினார்.

அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவிகள் 800 பேரும் கல்லூரி முதல்வர் பார்வதி தலைமையில் 40 குழுக்களாக பிரிந்து பிங்கர்போஸ்ட், வி.சி.காலணி, ரோகிணி தியேட்டர், தெரசா காலணி, ஹவுசிங் ,யூனிட் ஆகிய பகுதிகளுக்கு வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வீட்டைச்சுற்றி மழைத்தண்ணீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், சுற்றுப்புறத்தை குப்பைகள் இல்லாமல் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களை வைத்து வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளில் முதல் கட்ட சோதனையின் போது சுகாதாரமின்மை கண்டறியப்பட்டால் எச்சரிக்கை விடப்படும். இரண்டாவது முறையாக அதே தவறைச் செய்தால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. பொதுமக்களிடம் இது நம்ம ஊரு, இது நம்ம ஏரியா என்ற எண்ணம் வரவேண்டும் என்றார். முன்னதாக கலையில் காந்தல் பகுதியில் உள்ள ஸ்லாட்டர் ஹவுஸ் எனும் வதைக்கூடத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பொற்கொடி, நகராட்சி ஆணையாளர் ரவி, நகர்நல அலுவலர் டாக்டர் முரளி சங்கர்,  சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், எமரால்டு பெண்கள் கல்லூரி முதல்வர் பார்வதி, கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து