கோயம்புத்தூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாபெரும் விழாவாக கொண்டாடுவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்

வியாழக்கிழமை, 2 நவம்பர் 2017      கோவை
Nov 02A - MGR Cenetary Prog Photo

கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்  நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவது தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர்  பேசுகையில்,  பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா கோயம்புத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 03.12.2017 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இவ்விழாவில் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களை போற்றும் வகையிலும், பொதுமக்களுக்கு அன்னார்  செயல்படுத்திய அளப்பெரிய திட்டங்களையும், நற்செயல்களையும் நினைவுகூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இம்மாதம் (நவம்பர்) முழுவதும் நமது மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட அனைத்து துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 03.12.2017 அன்று பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பான முறையில் கொண்டாடப்படவுள்ளது. விழா தொடங்கும் 15 நாட்கள் முன்னரே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றிய அளவில் பள்ளி ஃ கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆகியோருக்கான விளையாட்டு, இலக்கியம், பேச்சு, கட்டுரை, ஓவியம் போட்டிகள், ஓட்டப்பந்தயம், பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், மிதிவண்டி பேரணி, விளையாட்டு வீரர்கள் பேரணி, சிறப்பு மருத்துவ முகாம்கள், இரத்த தானம் மற்றும் கண்பரிசோதனை முகாம்கள் மற்றும் திரைப்படவிழா, பட்டிமன்றம், என பல்வேறு நிகழ்ச்சிகளில் நடத்தப்பட்டு வருகின்றது. அதுபோலவே, மகளிர்திட்டத் துறையின் சார்பில் ஊரக பகுதிகளில் மகளிர்களுக்கும், விளையாட்டுத்துறையின் மூலம் இளைஞர்களுக்குமான சிறப்பு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

மேலும்,  முதலமைச்சர்  அதிகளவில் பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கிடும் வகையில் அனைத்து துறைகளின் சார்பில் தங்கள் துறைசார்ந்த நலத்திட்ட விவரங்கள் ஏற்கனவே கோரப்பட்டிருந்தது, முடிவு செய்யப்பட்ட இறுதி பட்டியலை வருகின்ற நவம்பர் 20ஆம் தேதிக்குளாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அவர்களிடம் சமர்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், தங்களது துறைகளின் சார்பில் துவங்கிய மற்றும் துவங்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள், கட்டிடப்பணிகளின் விவரத்தினையும் உடனடியாக மாவட்ட வருவாய் அலுவலர் வாயிலாக மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.

பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “தனி முத்திரை” (ளுpநஉயைட டுழபழ) விழா நடைபெறுவதை விளம்பரப்படுத்தும் வகையில், அனைத்து விழாக்கள் மற்றும் அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஒட்டி பொதுமக்களுக்கு விளம்பரபடுத்திட வேண்டும். அதுபோலவே, உள்ளுர் தொலைகாட்சிகளில் விழா நடைபெறுவதை விளம்பரப்படுத்தும் வகையிலான குறும்படங்களை திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் வட்டார போக்குவரத்து துறை மூலம், விழா நடைபெறும் நாளன்று பொதுமக்கள் வந்து செல்லும் வகையிலும், பயனாளிகள் அழைத்து வரும் வகையிலும் சிறப்பு பேருந்துகளை இயக்குதல் வேண்டும். காவல் துறையின் மூலம் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் பேருந்துகளை நிறுத்தும் வகையில் வாகனம் நிறுத்துமிடங்களை முன்னரே தெரியப்படுத்தி அதற்கான வழிகளை அறிவித்திட வேண்டும்.  பொதுப்பணித்துறையினர் விழா மேடை அமைத்தல், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அமர இருக்கைகள் தயார் படுத்துதல் பணிகளையும், விழா மேடையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் துறைகள் நலத்திட்ட உதவிகளின் மாதிரிகளை (ஆinயைவரசந) தயார் செய்து வழங்க வேண்டும்.

கோயம்புத்தூர் மாவட்டம் அனைத்து வகையிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக இருப்பதாலும், மேற்கு மண்டலத்திலே பெருமளவில் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜிஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டிருப்பதாலும், மாற்ற அனைத்து மாவட்டங்களைக்காட்டிலும் நமது மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடிட அலுவலர்கள் தங்களது சிறந்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் செயல்களை நினைவு கூறும் வகையிலும், அன்னாரை போற்றும் வகையிலும் வெகு விமர்சையாக கொண்டாடிட அனைத்து துறையினரும் சிறப்பாக பணியாற்றிட வேண்டுமென மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் பா.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி, வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, ஆர்.சின்னசாமி உள்ளிட்ட அனைத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து