Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் போர்கால அடிப்படையில் முன்எச்சரிக்கை நடவடிக்கை-கலெக்டர் தகவல்

வியாழக்கிழமை, 2 நவம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி அரசின் அறிவுறுத்தல்படி போர்க்கால அடிப்படையில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
     ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தின் இயல்பான மொத்த மழையளவு 827 மில்லி மீட்டர் ஆகும். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை மூலமாக 187.14 மில்லிமீட்டரும், வடகிழக்கு பருவமழை மூலமாக இதுவரை 64.7மில்லி மீட்டரும், மழைபொழிவு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் பெய்யவேண்டியது 182.6 மில்லி மீட்டர். ஆனால் பெய்தது  61.82 மில்லி மீட்டர் ஆகும். இந்த மாதம் பெய்ய வேண்டியது 206.3 மில்லி மீட்டர் ஆகும். இதுவரை  2.95 மில்லி மீட்டர் பெய்துள்ளது. இந்த ஆண்டு பருவமழையையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் மிதமாக பாதிக்கக்கூடிய பகுதிகளாக 38 பகுதிகள் கண்டறிப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை கண்டறிய 15 மண்டல அளவிலான குழுக்கள் வட்டாட்சியர்கள் தலைமையில் 135 இதர துறை அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வட்டங்களிலும் வடகிழக்கு பருமழை பணிகளை கண்காணிக்க எட்டு துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் புயல் காலங்களில் பாதிக்கக் கூடிய பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைக்க 32 நிவாரண மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் என கருதப்படும் பகுதிகளை  சரிசெய்வதற்கு ஏதுவாக 174 ஜே.சி.பி, 63 ஜெனரேட்டர்ஸ் மற்றும் 463 பம்பு செட்கள் மற்றும் 44,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது. ஏனைய இதர உபகரணங்கள் அனைத்து தயார் நிலையில் உள்ளது. பாதிக்கப்படும் இடங்களில் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான உணவுப்பொருட்கள் சேமித்து வைக்க  53 இடங்கள் தேர்வு செய்யப்ட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவுவதற்கு ஏதுவாக 80 படகுகள் மற்றும் 316 நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். தொற்று நோய் கண்காணிப்பு பணியில் தேவையான மருத்துவக்குழுவினர் மண்டல அளவில் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். தேவையான மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.
     பாதிக்கப்படும் என கருதப்படும் பகுதிகளில் இருக்கும் குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் ஆகியோருக்குத் தனிக்கவனம் எடுத்து தேவைப்படின் அவர்களை இடமாற்றம் செய்வதற்கும் ,அவர்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்கள் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தவையான தீவணம் , மருந்துப்பொருட்கள் மற்றும் அவற்றை பாதுகாக்கும் பொருட்டு ஐந்து வட்டாரங்களில் கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில் நிவாரண மையங்கள்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசாணை 50ன்படி பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சித் துறைக்கு சொந்தமான 1526 ஊரணி மற்றும் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு வரத்துக்கால்வாய் போன்றவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 400 வருவாய் கிராமங்களில் 6024 முதல்நிலை மீட்பு பணியாளர்களை கொண்டு 400 முதல்நிலை மீட்பு குழு அமைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றைய நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 நபர்களுக்கும், இதர வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 39 நபர்களுக்கும் இம்மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவ மனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவ மனைகளில் இரத்த திட்டு அனுக்கள் பிரிக்கும் இயந்திரம் மூலம் நாள் ஒன்றுக்கு 48 யூனிட்    ரத்த திட்ட அனுக்கள் பிரிக்கப்பட்டு தேவைப்படும் நபர்களுக்கு பயன்படுத்தப்பட்டு  வருகிறது. ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி அரசு மருத்துவ மனைகளில் நாள் ஒன்றுக்கு 600 யூனிட்டும், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் 225 யூனிட்டும்  ரத்தம் சேமிக்கும் வசதி உள்ளது. அரசு தலைமை மருத்துவ மனை, அனைத்து தாலுகா அரசு மருத்துமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த திட்ட அணுக்கள் மதிப்படும் எந்திரம் 30 நிறுவப்பட்டு அதன் மூலம் காய்ச்சல் உள்ள நோயாளிகளின் இரத்த திட்ட அணுக்களின் எண்ணிக்கையை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிற மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சல் மூலமான பதிப்பு பரவலாக உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தீவிர நடவடிக்கைகளின் காரணமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 
     இதில் தற்போது நான்காவது கட்டப் பணியாக 100 வீட்டிற்கு ஒரு நபர் என்ற விகிதத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களிலிருந்து நடுத்தர வயதுடைய தன்னார்வமுள்ள 3640 நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு லார்வாக்கள் வளரும் பலதரப்பட்ட அமைப்புகளை கண்டறிந்து அழித்தல் மற்றும் அவை உருவாக வாய்ப்புள்ள தூய தண்ணீர் தேங்கிடக்;கூடிய பொருட்களை கண்டறிந்து அப்புறப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் 100 வீடுகள் வீதம் ஒதுக்கி கொடுக்கப்படவுள்ளது.  இவர்கள் நாள்தோறும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்துகொடுக்கப்பட்டுள்ள 100 வீடுகள் அடங்கிய பகுதிகளை மட்டும் சுழற்சி அடிப்படையில் கண்காணித்து வந்து லார்வாக்கள் உருவாகாமல் கண்காணிப்பார்கள். இவர்கள் தவிர வழக்கமாக இப்பணியில் ஈடுபட்டுள்ள 1063 ஊராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 1816 தூய்மைக் காவலர்களும் நாள்தோறுதம் இப்பணியை செய்துவருவார்கள்.  மேலும், ஊராட்சி ஒன்றிய பொதுநிதி மூலம் 380 தினக்கூலி பணியாளர்கள் மருத்துவத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களது  கண்காணிப்பில் இப்பணியை செய்து வருகிறார்கள்.   சுகாதாரமற்ற முறையில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவதற்கு சாதகமாக இருந்த இடங்களின் உரிமையாளர்களுக்கு இதுவரை ரூ.23.65 லட்சம் மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டு, இதுவரை ரூ.6.70 லட்சம் மதிப்பில் அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது.  சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து