முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீர் தேக்கி வைப்பதை தவிர்த்து சுத்தமாக பராமரிக்கு வேண்டும் மதுரை ஆணையாளர் அனிஷ்சேகர் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 2 நவம்பர் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை .-மதுரை மாநகராட்சி ஆனையூர் பகுதியில்  டெங்கு தடுப்பு பணியினை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 வார்டு எண்.3 பகுதியில் டெங்கு தடுப்பு பணியினை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர். ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 வார்டு எண்.3 ஆனையூர் மந்தையம்மன் கோவில் பகுதி, ஆனையூர் வடக்கு, மேற்கு மற்றும் தெற்குத் தெருக்களில் டெங்கு தடுப்பு பணியினை ஆய்வு மேற்கொண்டு வீடு வீடாக பிடித்து வைக்கப்பட்டுள்ள குடிநீரில் டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து ஆய்வு மேற்கொண்டு பிடித்து வைத்துள்ள தண்ணீரினை மூடி பாதுகாப்பாக வைக்குமாறு கூறினார். அப்பகுதியில் டெங்கு பாதித்த வீட்டிற்கு சென்று மருத்துவ அறிக்கையினை பார்வையிட்டு தம் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைக்குமாறு கூறினார். ஆனையூரில் உள்ள மழைநீர் வடிகாலினை சுத்தப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். உடனடியாக வடிகாலினை சுத்தப்படுத்துமாறு உத்தரவிட்டு குப்பைகளை வடிகாலில் கொட்டுவதை தவிர்க்குமாறு கூறினார். வீடுகளில் கழிவுநீர் தொட்டி அமைக்காமல் நேரடியாக மழைநீர் வடிகாலில் கழிவுநீரை விடும் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்குமாறு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதியில் தனிநபர் கழிப்பறை இல்லாத வீடுகளை கணக்கெடுத்து அனைவருக்கும் தனிநபர் கழிப்பறை கட்டி தருமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். அங்குள்ள வீட்டில் இருந்த பிட்டேப்பில் தண்ணீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டு உடனடியாக பிட்டேப்பை அகற்றி மூடுவதற்கு உத்தரவிட்டார். அப்பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்து அருகில் உள்ள காலியிடம் புதர்மண்டி கிடப்பதால் உடனடியாக சுத்தம் செய்து அதற்குண்டான தொகையை சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் அபராதமாக வசூலிக்குமாறு கூறினார்.

அதனைத் தொடர்ந்து குலமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் அலுமினிய தொழிற்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு தேவையற்ற பழைய பொருட்களையும், தொட்டிகளில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரினையும் அப்புறப்படுத்துமாறும் ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் இனி வருங்காலங்களில் தண்ணீர் தேக்கி வைப்பதை தவிர்த்து சுத்தமாக பராமரிக்குமாறும், தவறும்பட்சத்தில் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என  எச்சரிக்கை விடுத்தார். மதுரை கே.கே.நகர் ஆவின் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள மழைநீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு கூறினார்.
மேலும் வார்டு எண்.54 தெப்பக்குளம் ஆசிரியர் காலனி மருது பாண்டியர் நகர் 3, 4 மற்றும் 5 வது குறுக்குத் தெருக்களில் டெங்கு தடுப்பு குறித்து வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டு தேவையற்ற அப்புறப்படுத்துமாறு கூறினார். ஒரு வீட்டில் உள்ள ஏர்கூலரில் ஆய்வு செய்த போது அதில் டெங்கு கொசு புழு உற்பத்தி இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக அப்புறப்படுத்துமாறும், குளிர்சாதனப்பெட்டி, ஏர்கூலர் ஆகியவற்றை வாரவாரம் சுத்தம் செய்யுமாறு வீட்டின் உரிமையாளரிடம் கூறினார். அப்பகுதியில் உள்ள பனையூர் வாய்க்காலில் தேங்கியுள்ள குப்பைகள் அகற்றும் பணியினை பார்வையிட்டார்.
முன்னதாக நரிமேடு பகுதியில் ஆய்வு செய்த போது சிங்கராயர் காலனியில் உள்ள தனியார் வாகன காப்பகத்தில் பழைய டயர்களில் தேங்கியுள்ள மழைநீரில் டெங்கு கொசு புழு உற்பத்தி இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக ரூ.5000 அபராதம் விதித்து டயர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது நகரப்பொறியாளர் மதுரம், உதவி வருவாய் கோட்டாட்சியர் கே.கார்த்திக்கேயன், உதவி ஆணையாளர்கள் அரசு, ரமேஷ், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவிப்பொறியாளர் மணியன், சுகாதார அலுவலர்கள் விஜயகுமார், நாகராஜ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து