முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டெர்: செனட் சபை ஒப்புதல்

வெள்ளிக்கிழமை, 3 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டெர் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் அதற்கான ஒப்புதலை அமெரிக்க செனட் சபை வழங்கியுள்ளது.

ரிச்சர்ட் வர்மா....

இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பதவி வகித்தவர் ரிச்சர்ட் வர்மா. இவரது பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அந்த பதவிக்கு கென்னத் ஜஸ்டெரின் பெயரை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்திருந்தார். கென்னத் ஜஸ்டெர், கடந்த ஜூன் மாதம் வரை டிரம்பின் சர்வதேச பொருளாதார விவகாரங்கள் துணை உதவியாளராகவும், தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனராகவும் பதவி வகித்தார். அதற்கு முன்னதாக கடந்த 2001 முதல் 2005ம் ஆண்டுவரை, முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் வணிக செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில், இந்தியாவிற்கான அமெரிக்கா தூதராக கென்னத் ஜெஸ்டெர் செயல்படுவதை அந்நாட்டு செனட் சபை உறுதி செய்துள்ளது.

வாக்கெடுப்பில் உறுதி

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமை கென்னத் ஜெஸ்டெர் தேர்வு செய்யப்பட்டது குறித்து குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவு துறை தொடர்பான குழுவினர் ஜெஸ்டருக்கு தங்கள் ஆதரவை அளித்தனர். இதையடுத்து, இந்தியாவிற்கான புதிய தூதராக கென்னத் ஜெஸ்டர் செயல்படுவது உறுதியாகி உள்ளது என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து