முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிசை அல்லது ஓட்டு வீட்டை அகற்றி புதிய கான்கிரீட் வீடு கட்டுவதற்கான ஆணைகள்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 3 நவம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர் .-விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்;தில் பள்ளிக்கல்வித்துறை மூலமாக திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் திருத்தங்கல் நகராட்சியைச் சேர்ந்த 204 பயனாளிகளுக்கு வேலை தொடங்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  முன்னிலையில்,   பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி  வழங்கினார்கள். 
 இத்திட்டத்தின் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ்  போதுமான அடிப்படை வசதிகளுடன் 30 ச.மீ வரை தளப்பரப்பபு கொண்ட வீடுகள் கட்டும் திட்டத்திற்கு நிதி ஆதாரம் ஏற்படுத்தும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்பு திட்டமானது, பயனாளிகள் தாமாகவே வீடுகள் கட்டுதல் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு தங்களது குடிசை அல்லது ஓட்டு வீட்டை அகற்றி புதிய கான்கிரீட் வீடு கட்டுவதற்கு மைய அரசின் மானியம் ரூ.1.5 இலட்சம் மற்றும் மாநில அரசின் மானியம் ரூ. 60,000ஃ- மொத்தம் ரூ.2.10 இலட்சம் மானியம் வழங்;கப்படும்.
 தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், அடித்தட்டு குடிசை வாழ் மக்களின் குறைகளை களைந்து அவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதில்; நாட்டிலேயே முன்னோடியாக விளங்குகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் அறிவித்த தொலைநோக்கு திட்டம் - 2023-ன் படி தமிழ்நாட்டை குடிசையில்லாத மாநிலமாக 2023-க்குள் மாற்ற முயற்;சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு “பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்” என்ற புதிய திட்டத்தை 2015ல் அறிவித்தது. அதன்படி நாட்டிலுள்ள வீட்டற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் 2022ம் ஆண்டிற்;குள் வீடுகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 பயனாளிகள் தங்களது குடிசை அல்லது ஓட்டு வீட்டை அகற்றி  தாங்களாகவே சுயமாக வீடுகளை 300 சதுர அடி பரப்பளவிற்கு குறையாமல் (ஊயசிநவ யுசநய) வீடு கட்டிக் கொள்ளும் திட்டமாகும். இத்திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகளின்  மானியமாக ரூ.2.10 இலட்சம் நான்கு தவணைகளாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  விருதுநகர் மாவட்டத்திற்கு 2348  வீடுகள் ரூ. 7044 லட்சங்கள் மதிப்பீட்டில்; கட்ட ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளது. இவற்றில் திருத்தங்கல் நகராட்சியில் ரூ. 612 இலட்சங்கள் மதிப்பீட்டில் 204 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டு, மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி   வேலை தொடங்குவதற்கான ஆணைகளை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்  டி.ராதாகிருஷ்ணன், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர்  தினகரன், வட்டாட்சியர்கள்  .ஸ்ரீதர் (சிவகாசி), விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர்  பாண்டியராஜன் உட்பட அரசு அலுவலர்கள ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து