முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று: ரயில் பாலத்தில் ரயில்கள் ஊர்ந்து சென்றன.

வெள்ளிக்கிழமை, 3 நவம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- பாம்பன் கடலில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் தண்டவாளம் பகுதியில் கடலின் அலை அடித்துவந்ததையொட்டி ரயில் பாலத்தில் வெள்ளிக்கிழமை ரயில்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டல உருவானதையொட்டி தமிழக கடல் பகுதிகளில் பலத்த காற்று தொடர்ந்து வீசி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாம்பன்,ராமேசுவரம் தனுஸ்கோடி,மண்டபம் ஆகிய கடலோரப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகுதி வாரியாக தூரல் மழையுடன் கூடிய சூறாவளி காற்று தொடர்ந்து வீசி வருகிறது.இதனையடுத்த வெள்ளிக்கிழமை காலையில் பாம்பன் ரயில் பாலம் அருகில் பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டது.இதனால்  ரயில் தண்டவாளம் பகுதியில் கடல் அலை ஆக்கிரசுத்துடன் மோதி வந்தது.அதுபோல அப்பகுதியில் நாட்டுபடகு மீனவர்கள் சிலர் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரங்களில் நங்கூரமிட்டு பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.அதுபோல பாம்பன் ரயில் பாலத்தில் ராமேசுவரம் பகுதியிலிருந்து காலையிலும்,பகலிலும் வெளி பகுதிகளுக்கு  புறப்பட்டு சென்ற ரயில்களும்,சென்னை,திருச்சி,மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து ராமேசுவரம் வந்த ரயில்களும் பாம்பன் ரயில் பாலத்தில் கடந்தபோது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மெதுவாக ஊர்ந்து சென்றன.மேலும் ராமேசுவரம் தீவு பகுதி முழுவதும் மேகம் இருண்ட நிலையில் காணப்பட்டதால் கட்டிடக் கூலித்தொழிலாளிகள்,மீனவர்கள் உள்பட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து