முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு போடி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்

வெள்ளிக்கிழமை, 3 நவம்பர் 2017      தேனி
Image Unavailable

போடி, -தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக பூஜை நடைபெற்றது.
ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்தால் சிவபெருமானின் அருளும், அன்னபூரணியான பார்வதி தேவியின் அருளும் ஒன்றாக கிடைக்கும் என்பது ஐதீகம். இதனை முன்னிட்டு போடி அருள்மிகு பரமசிவன் மலைக்கோவிலில் சிவலிங்க பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிவலிங்க பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தக்கார் பாலகிருஷ்ணன், அர்ச்சகர் சுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை குழுவினர் சார்பில் பரமசிவன் மலைக்கோவிலில் கிரிவலம் நடைபெற்றது. பின்னர் கிரிவல பூஜை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் போடி பிச்சங்கரை கீழச்சொக்கநாதர் கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சியில் சிவலிங்க பெருமானுக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடைபெற்றது. பூஜையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
போடி வினோபாஜி காலனியில் உள்ள மருத்துவர் குல சங்கத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பூஜை செய்யப்பட்ட அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னதானமும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மீனாட்சி சுந்தரேசுவரருக்கு 16 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரணை நடைபெற்றது பூஜை ஏற்பாடுகளை மருத்துவர் குல சமூக சங்க தலைவர் முத்துச்சாமி, அர்ச்சகர் சேகர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல் போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி திருக்கோவிலிலும் அன்னாபிஷேக பூஜை நடைபெற்றது.
    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து