முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே சிமெண்ட் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 3 நவம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

  நத்தம், - திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறை கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராசு(37), பிள்ளையார்நத்தம் புது£ரைச் சேர்ந்தவர் பிச்சை(37). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் நத்தத்திலிருந்து சோழவந்தானுக்கு விவசாய கூலி வேலைக்கு சென்றனர். அப்போது நத்தத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் புதுக்கோட்டைக்கும் வத்திபட்டிக்கும் இடையில் சென்று கொண்டிருந்தனர்.
            இவர்களுக்கு முன்னதாக மதுரையை நோக்கி சிமெண்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பிச்சை எதிரே வந்த வாகனத்தை பார்த்து பதட்டமடைந்து நிலை தடுமாறி லாரியின் சக்கரப்பகுதியில் விழுந்து விட்டனர். தொடர்ந்து பின்னால் அமர்ந்து வந்த ராசு சிமெண்ட் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் இறந்து போனார்.  பிச்சை உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து நத்தம் போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து