முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா திட்ட முகாம் கலெக்டர் வீரராகவராவ் பார்வையிட்டார்

வெள்ளிக்கிழமை, 3 நவம்பர் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.-மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட தனக்கன்குளம் கிராமம் மற்றும் மதுரை மேற்கு வட்டத்திற்குட்பட்ட துவரிமான் கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ் பார்வையிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 தனக்கன்குளம் கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் வரப்பெற்ற மனுக்களில் 26 மனுக்கள் உதவித்தொகை வேண்டியும், 2 மனுக்கள் முதல் திருமணச்சான்று வேண்டியும், 1 மனு ஆதார் திருத்தம் வேண்டியும், 1 மனு இலவச வீட்டு மனை வேண்டியும், 4 மனுக்கள் வருமானச்சான்று வேண்டியும், 1 மனு இருப்பிடச்சான்று வேண்டியும் என மொத்தம் 35 மனுக்கள் பெறப்பட்டது.  இதில் 13 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.  12 மனுக்கள் தள்ளபடி செய்யப்பட்டுள்ளது.  10 மனுக்கள் மேல்நடவடிக்கையில் உள்ளது.   இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 4 நபர்களுக்கு வருமானவரிச்சான்றும், ஒரு நபருக்கு இருப்பிடச்சான்றினையும் வழங்கினார்.
 துவரிமான் கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் வரப்பெற்ற மனுக்களில் 1 மனு உழவர் அட்டை வேண்டியும், 3 மனுக்கள் விதவை சான்று வேண்டியும், 1 மனு கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை வேண்டியும், 8 மனுக்கள் முதியோர் உதவித்தொகை வேண்டியும், 10 மனுக்கள் இலவச வீட்டுமனைப்பட்டா வேண்டியும், 2 மனுக்கள் சிட்டா நகல் வேண்டியும், 2 மனுக்கள் வருமானச்சான்று வேண்டியும், 1 மனு இருப்பிடச்சான்று வேண்டியும், 1 மனு முதல் திருமணச்சான்று வேண்டியும் என மொத்தம் 29 மனுக்கள் பெற்றப்பட்டது.  இதில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டது.  14 மனுக்கள் மேல்நடவடிக்கையில் உள்ளது.  இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 9 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 1 நபருக்கு சிட்டா நகலும், 2 நபர்களுக்கு வருமானவரிச்சான்றும், 1 நபருக்கு இருப்பிடச்சான்றும், 1 நபருக்கு முதல் திருமணச்சான்றும் என மொத்தம் 15 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
   அம்மா திட்ட முகாம்களில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு இலவச கண்பரிசோதனை, காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, நில வேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
 இம்முகாம்களில் மதுரை வருவாய் கோட்டாட்சியர் திரு.கார்த்திகேயன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி.சாந்தா, வட்டாட்சியர்கள்  .பாலாஜி (மதுரை மேற்கு),  சுரேஷ் (திருப்பரங்குன்றம்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து