ஆதியூரில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன்-கே.சி.கருப்பண்ணன் திறந்து வைத்தனர்

வெள்ளிக்கிழமை, 3 நவம்பர் 2017      திருப்பூர்
3 11 2017 ph 2

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலூக்கா ஆதியூரில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
ஆதியூர் பகுதியில் கிளை கால்நடை மருந்தகமாக செயல்பட்டுவந்ததை,பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று முழுநேர கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இதன்திறப்பு திருப்பூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடந்தது. தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தை தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,தமிழக சுற்று சூழல் துரை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆதியூரில் விரைவில்  கால்நடை மருந்தாக கட்டடம் கட்டப்படும்,பொதுமக்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

விழாவில் பெருந்துறை எம்.எல்.ஏ.தோப்பு என்.தி.வெங்கடாசலம்,கால்நடை பராமரிப்புத்துறை இனைஇயக்குனர் ரங்கசாமி,துணை இயக்குநர் முருகன்,உதவி இயக்குநர் சிகாமணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து