ஏழுமலையானை தரிசித்த ஜெகன் மோகன்ரெட்டி

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      ஆன்மிகம்
Jegan Mohan 05 08 2017

திருப்பதி : ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திரா முழுவதும் பாதயாத்திரை தொடங்கவுள்ள நிலையில், இது வெற்றிகரமாக அமைய  ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

‘பிரஜா சங்கல்ப யாத்திரா’ என்ற பெயரில் ஜெகன், இன்று கடப்பா மாவட்டத்தில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார். 6 மாத காலம் நடைபெற உள்ள இந்த பாதயாத்திரையில் மொத்தம் 3,000 கி.மீ. வரை இவர் நடந்து சென்று மக்களை சந்திக்கிறார். ஜெகன் தனது பாதயாத்திரை வெற்றிகரமாக அமைய வேண்டி, நேற்று காலை திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து